பக்கம்:நூலக ஆட்சி.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வசதியாக இருக்கும். இவைகள், மாத, வார, வெளியீடுகளைத் தனித்தனியாகச் சரி பார்க்கின்ற முறையிலே பொருத்தப்படல் வேண்டும். அட்டையினைப் பற்றிய விளக்கமாவது :- அட்டையின் மேலே கொஞ்சம் இடம் விடல் வேண்டும். அங்கு முதலில் வெளியீட்டின் பெயர், வரவேண்டிய நாள் (உத்தேசமாக) என்ற இரண்டினையும் எழுதுதல் வேண்டும். அதற்குக் கீழே இடப்புறத்திலிருந்து ஆண்டு, தொகுதி, சனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, சூன், சூலை, முதலிய பன்னிரு மாதங்கள், அலுவலர் குறிப்புக்கள் (Remarks) என்ற பதினைந்து பிரிவுகள் அமைக்கவேண்டும். அட்டையின் பின்புறத்தில் மேலிருந்து கீழே, வெளியீடு கிடைத்த விதம், தலைப்புப் பக்கம், முதற்குறிப்பு, புதிப்பித்த நாள், வெளிவரும் காலம் என்பன குறிக்கப்படல் வேண்டும்.

வெளியீடு கிடைத்த விதம் என்ற தலைப்பின் கீழ் பின்வருவன குறிக்கப் பெறுதல் வேண்டும். விலை கொடுத்து வாங்கினால், எவரிடமிருந்து விலை கொடுத்து வாங்குகின்றோமோ அவரது பெயர் (வெளியிடுவோர் அல்லது வெளியீட்டகம்) எழுதப்பெறுதல் வேண்டும். அன்பளிப்பாகவோ அன்றி நூல்பறிமாற்றத்தின் மூலமாகவோ பருவ வெளியீடுகள் கிடைக்கப்பெற்றால், அன்பளிப்பாகவோ அன்றி மாற்றிதழாகவோ அனுப்பியவரின் பெயரினை எழுதுதல் வேண்டும்.

தலைப்புப் பக்கம், முதற்குறிப்பு :

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வெளியீடுகள் தொகுதியாக ஆக்கப்படும்பொழுது அவற்றின் தலைப்புப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/35&oldid=1111768" இலிருந்து மீள்விக்கப்பட்டது