இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பக்கமும், முதற்குறிப்பும் மிகவும் தேவை. சில வெளியீட்டாளர்கள், ஆண்டிறுதியிலே, ஒரு தொகுதி முடிந்தவுடன், அத்தொகுதி பற்றிய தலைப்புப் பக்கம், முதற் குறிப்பு (பொருளடக்கம்) இவற்றினை அனுப்புவர். ஒரு சிலர் முதல் பகுதி வரும்பொழுதே அனுப்பிவிடுவர். சிலர் வேண்டினாலொழிய அனுப்பார்.
புதுப்பித்தல் :
நூலகத்தலைவர் ஒழுங்காகப் புதுப்பித்தலில் அக்கறை மிகக்கொளல் வேண்டும். உரிய காலத்தில் ஒரு பருவ வெளியீட்டினைப் புதுப்பிக்காவிடில், ஒரு சில பகுதிகள் (issues) நமக்குக் கிடையாமல் போய்விடும்.
வெளிவரும் காலம் :
இதன்கீழ் மாதவெளியீடா, காலாண்டா (Quarterly), அரையாண்டா என்ற விவரம் கொடுக்கப்படல் வேண்டும்.
சான்றுக்காக ஒரு பருவவெளியீட்டு அட்டை கீழே வரையப்பட்டுள்ளது.