பக்கம்:நூலக ஆட்சி.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5. நூல் வழங்கும் முறை


பிறருக்கு வழங்கும் நூல்களை மறுபடியும் திரும்பப் பெறுவதற்கு அந்நூல்களைப் பதிவு செய்தல் வேண்டும். இங்ஙனம் செய்யும் முறைக்கு ஆங்கிலத்திலே ‘Charging’ என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. நூல் வழங்குங்கால் பின்வருவனவற்றைப் பதிவு செய்தல் நலம்.

  1. நூல் வழங்கப்பட்ட காலம் (Date of issue).
  2. வழங்கப்பட்ட நூல்களின் எண்ணிக்கையும் அவைகளைப்பற்றிய விவரங்களும்,
  3. நூல் வழங்கப்பட்டோர்.
  4. நூலினைத் திருப்பித் தரவேண்டிய நாள்.

மேற்கூறிய விவரங்களைப் பண்டுதொட்டு ‘நூல் வழங்கும் ஏட்டில்’ (Issue Register) பதிவு செய்து வருகின்றனர். ஆனால் பெரிய நூலகங்களிலும், பொது நூலகங்களிலும், விரைந்து தொழிலியற்றும் திறன் மிகவும் வேண்டப்படுவதாகும். இத்தகைய நூலகங்களில் முன்னர்க் கூறியது போன்று பதிவு செய்தால் காலமே வீணாகும். இவ்வாறு காலம் வீணாவதைச் சீட்டு முறையினால் (Ticket system) தடுக்கலாம். இம்முறையே இன்று எல்லாப் பெரிய நூலகங்களிலும் நடைமுறையிலுள்ளது. மேலும் நூல் வழங்கும் நேரமும் வரையறை செய்யப்படல் வேண்டும். நூல்களை வீட்டிற்கு எடுத்துச் செல்லுதற் பொருட்டு உறுப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/50&oldid=1111783" இலிருந்து மீள்விக்கப்பட்டது