பக்கம்:நூலக ஆட்சி.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

களுக்குக் ‘க்யூ’ வரிசையில் செல்ல வசதியாக இருக்கும். வெளியே செல்ல 1½ அடி அகலத்தில் இடுப்பளவு உயரமுள்ள ஒரு சிறு கதவு இருக்கவேண்டும். இக்கதவு நூல் வழங்குபவர் தம் இருக்கையில் இருந்து கொண்டே எளிதில் எட்டித் திறக்கவோ மூடவோ வசதியாக இருத்தல் வேண்டும்.

நாணயப் பெட்டி (Cash Box)

உண்டியற் பெட்டிகளைப் போலப் பூட்டப்பெற்று மேற்புறத்திலே நாணயங்கள் போடுவதற்கு ஏற்ற துவாரமுள்ளதாக நாணயப்பெட்டி இருத்தல் வேண்டும் இப்பெட்டியில் நூலைக் காலங்கடத்திக் கொண்டு வருவோர் செலுத்தும் தண்டப் பணத்தினை (ஒறுத்தல் -Fine) போட வேண்டும்.

நூல் வழங்கும் முறை

நூலக உறுப்பினர்கள் நூலகப் பணியாளருக்குத் துணைபுரியும் முறையில் ஒழுங்காக ‘க்யூ’ வரிசையில் நின்று நூலின் முன் அட்டையைத் திறந்து அதில் உறுப்பினர்ச் சீட்டையும் வைத்து நூலகப் பணியாளரிடம் கொடுக்க வேண்டும். நூல் பழுதுண்டிருப்பின் அதனை வழங்காது எடுத்து வைப்பது நல்லது: ஒவ்வொரு நூலிலும், நூல்அட்டையிலும், நாள் சீட்டிலும், எழுதப் பெற்றிருக்கும் நூலினுடைய வகைப்படுத்திய எண்ணும் வரிசை எண்ணும் ஒத்திருக்கின்றனவா எனப்பார்த்து ஒத்திருப்பின் நூல் அட்டையினை நூல் பையினிடத்திலிருந்து அகற்றி, உறுப்பினர்ச் சீட்டுடன் இணைத்து வைத்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/58&oldid=1112336" இலிருந்து மீள்விக்கப்பட்டது