பக்கம்:நூலக ஆட்சி.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13. ஆராய்ச்சியகத்தை விட்டு ஒருவர் வெளியேறு முன்னர் தான் படித்த நூலை அப்படியே விசிப்பலகை மீது (Table) வைத்துவிட்டுச் செல்லவேண்டும். அவரே அலமாரியில் திரும்பவும் வைக்கக்கூடாது.

14. நூலகத்தலைவருக்கு எழுத்து விண்ணப்பம் கிடைத்தபிறகே சில நூல்கள் தரப்படும். அவைகளைப் படித்தபின் நூலகத் தலைவரிடமோ அவரது உதவியாளரிடமோ ஒப்படைத்துவிடவேண்டும்.

இ. நூல்கள் வழங்கும் பகுதி (Lending Department)

15. நூலகத்தில் நூல்கள் வழங்கும்பகுதி நூல்களை இல்லத்திற்கு எடுத்துச் செல்லக் கொடுக்கவும், திரும்பப் பெற்றுக்கொள்ளவும் காலை எட்டு முதல் பத்தரை மணி வரையிலும், மாலை நாலரை முதல் ஆறரை மணிவரையிலும் திறந்திருக்கும்.

16. நூலக ஆணைக்குழுவினரால் ஒப்புக்கொள்ளப்பட்ட இடங்களில் வாழ்பவராகவும், பதினேழு வயதிற்கு மேற்பட்டவராயும் இருக்கும் எவரும் ஐந்தோ பத்தோ வெண்பொற்காசுகள் (Rupees) பொறுப்புப் பணமாகச் (Deposit) செலுத்தி நூலகத் தலைவர் ஏற்றுக்கொள்ளும் வகையில், கீழ்க்காண்பவர்களில் எவரையேனும் பொறுப்பாகக் காட்டினால் ஒரு நூலோ இரு நூல்களோ இரு வாரகால அளவிற்கு மிஞ்சாது இல்லத்திற்குப் படிப்பதற்காக எடுத்துச் செல்லலாம்.

(க) அரசாங்க அலுவலர்களில் உதவிப் பள்ளித் தணிக்கை அலுவலரின் (Deputy Inspector

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/70&oldid=1123201" இலிருந்து மீள்விக்கப்பட்டது