பக்கம்:நூலக ஆட்சி.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4. நூலக உறுப்பினர்களுக்குப் படிப்பதற்குக் கொடுத்துதவிய நூல்களின் எண்ணிக்கை (No. of books issued) :

1. பொருள் வாரியாக
2. மொழி வாரியாக

5. காலம் நீட்டிக்கப்பட்ட நூல்களின் (Books renewed) எண்ணிக்கை :

6. பார்வையாளர் எண்ணிக்கை (No. of visitors) :

7. மேற்கோளுக்காக ஆண்ட நூல்களின் (Books consulted) எண்ணிக்கை :

இப் புள்ளி விவரங்களை நூலக அலுவலகத்தார் அன்றாடம் பின்வரும் நூலக நாட்குறிப்புக்களில் (Diaries) எழுதி வந்தால்தான் ஆண்டினிறுதியில் ஆண்டறிக்கை தயாரிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

1. நூல்களை வரிசைப் பதிவு செய்பவரது நாட் குறிப்பு

இதில் புதிதாக விலை கொடுத்து வாங்கப்பட்ட நூல்கள், நன்கொடையாக வழங்கப்பட்ட நூல்கள், நூல் பரிமாற்றம் மூலம் வந்த நூல்கள் இவைகளின் எண்ணிக்கை தனித்தனியாகவும் மொத்தமாகவும் குறிக்கப்பெறுதல் வேண்டும்.

2. நூல்களை வகைப்படுத்தல் நாட்குறிப்பு (classification Diary)

இந் நாட்குறிப்பில் வகைப் படுத்தப்பட்ட நூல்களின் எண்ணிக்கை எழுதப்படல் வேண்டும். ஒவ்வொரு பொருள் வாரியாக எண்ணிக்கை தருதல் மிக்க நலம் விளைவிப்பதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/75&oldid=1123205" இலிருந்து மீள்விக்கப்பட்டது