பக்கம்:நூலக ஆட்சி.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4. அலமாரி நூல்பட்டியல் (Shelf List)

ஒவ்வொரு அலமாரியிலும் இருக்கும் நூல்களைப் பற்றிய நூல்பட்டியல் அலமாரி நூல்பட்டியல் ஆகும். அதாவது ஒவ்வொரு அலமாரிக்கும் தனித்தனியாக நூல் பட்டியல் தயாரிக்கவேண்டும். இப்பட்டியல்கள் நூல் கணக்கெடுப்புக்கு (Stock Verification) மிகவும் பயன்படும்.

கணக்கெடுப்பு (Stock Verification)

நூலகம் என்பது ஒரு வளரும் நிலையம். ஆண்டு முழுவதும் அது மன்பதைக்குத் தொண்டு செய்கின்றது, எனவே ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் நூல்களைக் கணக்கெடுத்தல் இன்றியமையாததாகும். அப்பொழுது தான், திருப்பிக் கொடுக்கப்படாத நூல்களையும், இடம் மாறிய நூல்களையும், தொலைந்துபோன நூல்களையும் கண்டுபிடிக்க முடியும். ஆண்டிறுதியில் நூல்களைக் கணக்கெடுப்பதற்கு முன்னால், அவ்வப்பொழுது அதாவது வேலைப்பளு குறைந்திருக்கும்பொழுது, நூல்களையும், பருவ வெளியீடுகளையும் நூலகத்தார் நன்கு கணக்கெடுத்தல் வேண்டும்.

கணக்கெடுப்புக்கு முன்னர் நூல்கள் எல்லாம் உரிய முறையில் அடுக்கப்படல் வேண்டும். அதன்பின் இரு ஊழியர்கள் மேற்சொன்ன நூல்பட்டியல்களின் (Shelf Lists) துணைகொண்டு வேலையினைத் தொடங்கவேண்டும். ஒருவர் நூலின் வரிசை எண், வகைப்படுத்திய எண் என்பவற்றைப் படிக்கவேண்டும். மற்றவர் நூல் பட்டியல் மூலம் சரிபார்த்தல் வேண்டும். ஏதாயினும் ஒரு நூல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/87&oldid=1123212" இலிருந்து மீள்விக்கப்பட்டது