பக்கம்:நூலக ஆட்சி.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காணப்படாவிடின் அதனை நூல் பட்டியலில் குறித்தல் வேண்டும். அது தவறிய நூலக் காட்டும். அதன்பின் நூலகத்தார் காணாத நூல் யாருக்காவது தரப்பட்டதா நூல்வடிவாக்கத்திற்கு (Binding) அனுப்பப்பட்டதா என்று ஆராயவேண்டும். இந்த இருவகையிலும் நூல் இல்லையெனின் அதனைத் தொலைந்த நூலாகக் கருதி நூலடங்கலிலும், அலமாரி நூல் பட்டியலிலும், நூல் பட்டியல் தொகை அட்டைகளிலும் (Catalogue cards) குறித்தல் வேண்டும். தொலைந்த நூலின் அட்டைகளை, வரிசையிலிருந்து நீக்கித் தனிப்பெட்டியிலும் வைக்கலாம்.

மேற்கூறிய முறைக்குப் பதிலாக வேறோர் முறையினையும் கையாளலாம். அஃதாவது நூல்களது வரிசை எண்களை ஒரு தாளில் முறையாகக் குறித்துக்கொண்டு முன் கூறியது போன்றே ஒருவர் நூலிலுள்ள வரிசை எண்ணைப் படிக்க மற்றவர் இத்தாள்மூலம் நூல்களைச் சரிபார்க்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/88&oldid=1123213" இலிருந்து மீள்விக்கப்பட்டது