பக்கம்:நூல் நிலையம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

' விஞ்ஞானமும் நாமும் ”

என்ற முதலாவது பண்புப் புத்தகத்திற்கு ஹிந்து’ப் பத்திரிகையின் மதிப்புரை.

பென்குவின் வரிசையைப் போலத் தமிழிலே பண்புப் புத்தகம் ' என்னும் வரிசையில் கலை, விஞ்ஞானம் இலக்கியம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைத் தமிழ் நாட்டுப் பாமர மக்களின் நலனுக்காக உதவும் வகை யில் புத்தகங்களை வெளியிடுவது இந்தப் பதிப்பகத்தார் களின் நோக்கம்.

அந்த வரிசையிலே இந்த நூல் முதலாவதாக வெளி வந்திருக்கிறது இதில் விஞ்ஞான கண்டுபிடிப்புகளும். அவை மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்குப் புரியும் சேவை களும் எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. இதில், சோடா தண்ணீரிலிருந்து ஒளியின் வேகம் முதலிய பலதரப்பட்ட கட்டுரைகள் 12 அடங்கி இருக்கின்றன. டி. டி. ட்டி. பிளாஸ்டிக், தாவர நெய், பெட்ரோலியம், கண்ணுடி, வைரங்கள், கட்டிடங்களின் ஒலி அமைப்பு மு. த லிய கட்டுரைகள் அவற்றின் விஞ்ஞான விஷயத் தன்மையை நோக்கும்போது மிகவும் தெளிவாக எழுதப்பட்டுள்ளன. என்று கூறவேண்டும். விஞ்ஞானக் கல்வி அறியாதவர் களும் சுலபமாகப் புரிந்து கொள்ளும் படியாகப் பேச்சு வழக்கு நடையிலேயே கட்டுரைகள் யாவும் எழுதப் பட்டுள்ளன.

புத்தகத்தின் தோற்றம், அமைப்பு, அச்சு அனைத்தும் கவர்ச்சிகரமாக அமைந்துள்ளன. சில விஞ்ஞானக் கட்டுரைகளுக்குத் தகுந்த புகைப்படங்கள். அவைகளை விளக்கும் சித்திரங்கள் இந்த நூலில் சேர்க்கப்பட்டு இருந் தால் இந்த நூலின் உபயோகம் இன்னும் அதிகரித்திருக் கும். அதனுல், விலை சற்று உயர்த்துவதாக இருந்தாலும் பாதகமில்லை.

இதைப் போன்ற விஞ்ஞான அறிவை, எளிய முறை யிலே எடுத்துரைக்கும் புத்தகங்கள் முதியோர் கல்வித் திட்ட ஏற்பாட்டிற்கு மிகவும் பயன் தரத்தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/106&oldid=589886" இலிருந்து மீள்விக்கப்பட்டது