பக்கம்:நூல் நிலையம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 நூல் நிலையம்

தொகுதியைக் குறிக்கும். சீன மொழியில், "சாங்க் சுலு" என்ற சொல் நூலகத்தினேக் குறிப்பதற்கு வழங்கப்படு கிறது. இச்சொல்லிற்குப் பொருள் “நூற்களைச் சேகரித்து வைக்கும் இடம்,” என்பதாகும். பேராசிரியர் கில்ப்ரெக்ட் என்ற அமெரிக்க அறிஞர் பாபிலோன் நகரத்தின் மண்மேடு ஒன்றுக்கடியில் கண்டுபிடித்த களிமண் தகடு களால் ஆகிய நூலகம் நூலகத்தின் பழமையினேப்பாரெங் கும் பரப்பி கிற்கின்றது. இந்நூலகத்தின் காலம் கி. மு. 5000 என்று அறிஞர்கள் அறைகின்றனர். இங்கு 2500 களி மண் தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கோயிலே முதல் நூலகம் !

முதலில் மரத்திலோ அன்றி கல்லிலோ செதுக்கிய சில குறிகளே வரி வடிவமாகும். முதற் புத்தகம் களி மண் தகடுகளால் ஆகியது என்றும், முதல் நூலகம் கோயி லென்றும், நூலகக் காப்பாளர் கோயில் குருக்களே என்றும் சில சிந்தனேயாளர்கள் கருதுகின்றனர். இவ்வுண்மையினே அசீரியாவிற் கண்டுபிடிக்கப்பட்ட மற்ருெரு களி மண் நூலகம் நன்கு வலியுறுத்தும். இங் நூலகத்திலிருந்த களி மண் தகடுகள் இன்றும் லண்டன் பொருட்காட்சிசாலையில் உள்ளன.

வரை கருவிகள்

முதலில் மக்கள் எழுதுவதற்குக் கற்சுவர், மரக் கட்டை, களி மண் தகடு, செங்கல், இவைகளையே பயன் படுத்தினர். பின்னர் பேப்பிரசு’ (Papyrus) GT 65rAo செடியின் பட்டையும், கன்று, ஆடு இவைகளது பதம் செய்யப்பட்ட தோலும் முறையே பயன்படுத்தப்பட்டன எகிப்து எழுத்துக்களில் எழுதிய பேப்பிரசு ஏடு ஒன்று பாரெல்லாம் புகழும் பாரிசு நகரிலுள்ள, "பிப்ளியோதெக்” என்னும் பிரெஞ்சு காட்டுத் தேசீய நூலகத்தில் உள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/11&oldid=589791" இலிருந்து மீள்விக்கப்பட்டது