பக்கம்:நூல் நிலையம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது நூலக வளர்ச்சி 23

லாயினர். மாநிலங்கள் யாவும் ஒன்றுபட்டுக் கூட்டுறவு முறையில் பணியாற்றத் தொடங்கின. சமுதாய நலத் திட்டங்களின் கீழ் நூலகத் திட்டமொன்று திட்டப் பெற்றது. இத்திட்டம் வெற்றி பெறுதற்கு 46,000-க்கு மேற்பட்ட மக்கள் பல வழிகளிலும் பணிபுரியலாயினர். ஆறு ஆண்டுகளில் ஆற்றிய அரும்பணியினல், இத்துறையில் அற்புதங்கள் பல நிகழலாயின. மக்களாலேயே 130 நூலகக் கட்டிடங்கள் கட்டித் தரப்பட்டன. 832 நூலகங்கள் மக்களாலேயே புதுப்பிக்கப்பட்டன. சில மக்கள் நூலகங்களுக்குச் சென்று நூற்களைப் பழுது பார்ப்பதிலும், நாற்களே மக்களுக்குக் கொடுத்துதவுதலி அலும், நாற் பட்டியல் தயாரிப்ப்திலும், கையெழுத்துச் சுவடிகள்-அரசியல் பத்திரங்கள் இவைகளைப் பாதுகாப்ப திலும், உதவி புரியலாயினர். குழந்தைகளுக்கென ஒதுக் கப்படும் கேரங்களில், மக்களே, குழந்தைகளுக்குக் கதை

சொல்வாராயினர். பள்ளிகளுக்கும் சென்று நூலகப்பணி புரிந்தனர். இப்பணிகள் யாவும் பயிற்சிபெற்ற நூலகத் தார் பலரது மேற்பார்வையில் கடந்தன.

கி. பி. 1947-ல் எண்ணிறந்த மாநிலங்களுக்குத் திட்டங்கள் திட்டப்பெற்றன. மின்னி சோடா (Minne. sota) பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் நூலக வசதி பெற வாய்ப்பில்லாமலிருந்தனர். மின்னிசோடா பகுதி நூலகக் குழுவினரின் பெரு முயற்சியால், ஆறு பகுதிகளில் கிராமிய நூலகங்கள் திறக்கத் திட்டமொன்று தயாரிக்கப் பட்டது. இத்திட்டத்திற்காக உழைத்த மக்கள், நூலகக் கட்டிடங்களில்லாத கிராமங்களில், கடைகளிலும், முடி வெட்டும் இல்லங்களிலும் சிறு நூலகங்களைத் தோற்று வித்ததோடமையாது, பொன்னும் பொருளும், நூற்களும் கன்கொடையாகக் கொடுத்துதவினர். நூலக ஊர்திகள் (Book Mobile) சில வாங்கப்பட்டன. இவ்வூர் திகளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/32&oldid=589812" இலிருந்து மீள்விக்கப்பட்டது