பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/153

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

151

பிடாது. பல சமயங்களிலே உனக்கு இங்கிதம்கிறதே என்னான்னு தெரியாமப் போயிடறது”–என்று ஃபோனில் அவளை இரைந்தார். அவள் ஏதோ பதில் சொன்னாள். மீண்டும் கோபம் தணியாமல் “எங்கே எப்பிடி அளவாப் பழகனுங்கறதே உங்களுக்கெல்லாம் தெரியறதேயில்லே” என்றார் அவர். “ஒண்னுமில்லாததை எல்லாம் பெரிசு படுத்தி வீணாச் சண்டைக்கு இழுக்காதிங்க”–என்று கனிவாகக் கொஞ்சும் குரவில் இழைந்து அவருடைய கோபத்தை ஆற்றினாள் அவள். அப்புறம் கோபதாபமின்றி உரை யாடல் பத்து நிமிஷங்கள் தொடர்ந்தது. அவளுக்குத் தெரிந்த யாரோ ஒருவருக்குப் புது பஸ் ரூட் ஒன்று வேணுமாம். அதற்கு உதவி செய்யவேண்டுமென்று கோரி அவரைக் கெஞ்சினாள் அவள்.

“இதையெல்லாம் இப்படி ஃபோன்ல பேசப்பிடாதுங்கிறதை முதல்லே நீ தெரிஞ்சுக்கணும்..” என்று மறுபடியும் சூடேறிய குரலில் இரையத் தொடங்கினார் கமலக்கண்ணன். அவள் பதிலுக்கு இதமாக ஏதோ கூறினாள். “பார்க்கலாம்”– என்று பட்டும் படாமலும் சொல்லி ஃபோனை வைத்தார் அவர். அவளைப்போல் தன்வாழ்வின் ஒரு பகுதியில் பழகிய பெண் இவ்வளவு உரிமை எடுத்துக் கொண்டு உதவி கோருவதைக் கேட்டு அவருக்குத் தயக்கமாகவும் பயமாகவும் இருந்தது. பயமும், தயக்கமும்,மாயாவை நினைத்து அல்ல. பதவியை நினைத்தே அந்த உணர்ச்சிகள் உண்டாயின. குற்றம் புரிகிறவர்கள் எங்கே எங்கே என்று நெற்றிக்கண்ணைத் திறந்து வைத்துக்கொண்டு காத்திருக்கும் காந்திராமனைப் போன்றவர்கள் அவருடைய நினைவில் வந்து பயமுறுத்திக் கொண்டிருந்தனர். வரலாற்றின் படி குருட்சேத்திரப் போர் என்பது பல யுகங்களுக்குமுன் நடந்து முடிந்து விட்டாலும் தர்க்க்ரீதியாகவும், தத்துவரீதியாகவும் அது சராசரி இந்தியனின், மனிதனின் பொது வாழ்விலும், தனி வாழ்விலும் இன்றும் இந்த விநாடியும் நடைபெறக்கூடியதாகவே இருக்கிறது. எதிரே இருப்பவர்கள் நண்பர்கள், உறவினர்கள், வேண்டியவர்கள் என்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/153&oldid=1049070" இலிருந்து மீள்விக்கப்பட்டது