பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

47


றது மனைவியை. தாயாரைக் குறிக்கும்போது. பெரிய ‘அம்மா’...என்று அடைமொழி தருவதுவழக்கம். பங்களாவின் உள்கூடத்தில் மூலை அறையில் நீண்டி நாட்களாகப் படுத்த படுக்கையாக இருந்த நடமாட முடியாத – தன் தாயாரைப் பார்ப்பதற்காகப் போன கமலக்கண்ணன் – அன்று தாயிடம் கனிவாகவே இரண்டு வார்த்தைகள் விசாரித்தார். பார்வை மங்கிய அந்த மூதாட்டியின் மூக்குக்கண்ணாடியைத் தாமே மாட்டி விட்டுத் தமிழ்த்தினசரியில் வந்திருந்த தமது புகைப்படத்தையும், செய்தியையும்காட்டினார்.

“என்னமோ...அந்த முருகன் புண்ணியத்திலே நீ எவ்வளவோ நல்லாயிருக்கணும். உங்க நாயினா வார் ஃபண்டுக்குப் பணம்கொடுத்தப்ப அவரைப்பத்தி பேப்பர்காரன்லாம் இப்படித்தான் நெறைய எளுதினான். அதுக்குப்பெறவு இப்பத்தான் இப்பிடில்லாம் வருது...இதைப்பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு...”–என்றாள் அந்த அம்மாள்.

– அந்தக் குடும்பத்தில் ஆண்கள் என்றுமே அதிகம் பக்தர்களாக இருந்ததில்லை. பெண்கள் ஒவ்வொரு தலை முறையிலும் பக்தி– நியாயம்– பழைய நம்பிக்கைகள் எல்லாவற்றையும் விடாமல் பேணி வந்திருக்கிறார்கள். இந்த மூதாட்டியும் அப்படித்தான் என்பதைத் தன் வார்த்தைகள் மூலமே விளக்கினாள். அந்த அம்மாளின் – கணவர் கமலக்கண்ணனின் தந்தை ஜஸ்டிஸ் கட்சி– நாஸ்திக மனப்பான்மை இரண்டும் அளவாகக் கலந்திருந்தவர். ஆனால் தம் மனைவியை அவரால் கொள்கை மாற்றம் செய்ய முடிந்ததே இல்லை. மாறாக மனைவியால் கடைசி காலத்தில் முதுமையில் கமலக்கண்ணனின் தந்தையும் கொஞ்சம் பக்தராக மாறினார். அந்திம தசையில் ஆஸ்திகவிஷயமூமாகவும்– கோயில் கட்டிடநிதிகள் வகையிலும் கொஞ்சம் தாராளமாகவே கூட இருந்தார் கமலக்கண்ணன் தலையெடுத்த காலத்தில் குடும்பத்தில் இந்த நிலைமை முற்றிலுமே மாறி விட்டது. நாட்டிலும்தேசிய நிலைமைகள் வளர்ந்து வெற்றி பெற்றுவிட்டன. எனவே புதியமாறுதல் தேவையுமாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/49&oldid=1047327" இலிருந்து மீள்விக்கப்பட்டது