பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

நெஞ்சக்கனல்

வகித்துப்பேசி அந்தக் கூட்டமும், அதன் புகைப்படமும் அதற்கு நன்கொடை கொடுத்த செய்தியும் பத்திரிகையில் வரப்போக எல்லாருமே என்னைச் சுற்றிச்சுற்றி வருகிறார்கள். பேசவும் தலைமை வகிக்கவும் பரிசு வழங்கவும் அழைக்கிறார்கள். இந்த உலகில் பாமரர்கள் பலர் பெரும் புகழை அடையமுடியாத நிலையில் இருக்கிறார்கள் தாங்கள் புகழை அடையமுடியாத பலர் யாரையாவது தேடி அப்படித் தேடி கிடைக்கிற அந்த ஒர் ஆளுக்கு எல்லாப் புகழையும் அடைவித்துப் பார்த்து மகிழ்கிறார்கள். மக்கள் அப்படித் தேடிப்பிடித்துப் புகழை அடைவிக்கின்ற ஆளுக்குத்தான் தலைவர் அல்லது பிரமுகர் என்று பெயரும் ஏற்பட்டு விடுகிறது. நானும் இனி பிரமுகர் ஆகிறேன் என்பதற்கு தான் இவை எல்லாம் அடையாளங்கள்!’

கூட்டத்தலைமை, பொதுநிறுவனங்களுக்குத் தாராளமான நன்கொடை, திருப்பணி நிதியில் உபதலைவர் பதவி, சுவாமிகளின் அழைப்பு பரத நாட்டிய அரங்கேற்றத்துக்கு ஆசி எல்லாமே இதோ இதோ என்று வலிய வாய்க்கும் சந்தர்ப்பங்களாகத் தோன்றின. அவருக்கு தலைமை வகிக்க அழைத்துவிட்டுப்போக வந்த பிரமுகர் சென்ற சில விநாடிகளுக்கு எல்லாம் சோதிடர் ஒருவர் தேடிவந்தார். வெளியே வராண்டாவில் அவரை உட் கார்த்தி வைத்துவிட்டு அவர் கொடுத்திருந்த விஸிட்டிங் ‘கார்டை’ உள்ளே கமலக்கண்ணனிடம் கொண்டுவந்து கொடுத்தான் வேலைக்காரன். ‘கே.கே.சர்மா அஸ்ட்ராலஜர்’ என்று போட்டு அவருடைய முகவரியும் டெலிபோன் நம்பரும், தந்தி முகவரியும் எல்லாம் அந்தச் சிறு அட்டையில் நெருக்கமாக அச்சிடப்பட்டிருந்தன. கமலக்கண்ணன் வெளிப் பேச்சில் சோதிடத்தை எதிர்த்துப் பேசுகிறவராக இருந்தாலும் இப்போது என்னவோ தன் எதிர்காலத்தைச் சற்றே தெரிந்து கொள்ள வேண்டும் என்பது போல் ஆசைப்பட்டார். எனவே அவரை உடனே உள்ளே அனுப்பும்படி வேலைக்கார்னிடம் கூறினார் கமலக்கண்ணன். தொழில்திறன் வாய்ந்த அந்தச் சோதிடர் உள்ளே வந்து கமலக்கண்ணனை எதிரே சந்தித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/64&oldid=1047538" இலிருந்து மீள்விக்கப்பட்டது