பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 நெஞ்சின் கினேவுகள்

சொற்களை அமைத்துக் கொண்டிருப்பான். இம்முறையில் தாய், கந்தை, மகன், மகள், குழந்தை, தண்ணிர், உணவு, உடை, வீடு முதலானவற்றிற்குரிய சொற்கள் மொழியில் முதன் முதலில் ஏற்பட்டிருக்க வேண்டும். தொடக்க காலத் தில் மனிதன் படைத்துக்கொண்ட சொற்கள் அடிக்கடி பயின்று வழங்கிய காரணத்தால் சிறுசிறு சொற்களாக அமைந்திருக்கக் காணலாம். தமிழில் வழங்கும் எண்ணுப் GLlufræGGuh (Numericals), மூவிடப் பெயர்களும் (Prononus) அடிக்கடி வழக்கில் பயின்று வழங்கிவரும் பான்மை காரணமாகச் சிறு சிறு சொற்களாக அமைக் திருக்கக் காணலாம். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து என்னும் எண் களே நோக்குக. இது போன்றே மூவிடப் பெயர்கள், நான், நீ, அவன் முதலான சொற்களும் சிறு சொற்களாக அமைந்துள்ளன. மேலும் தமிழில் தற்போது என்னுடைய siri, (My mother)2-cirgolsol-ul ghiri (Your mother), -sta, னுடைய தாய் (His mother) என்று ஆரும் வேற்றுமை உருபினச் சேர்த்து வழங்குகின்றாேம். ஆல்ை பழங்காலத் தில் இவ்வாறு இச்சொற்கள் நீட்டி வழங்கப் பெறவில்லை. சங்க இலக்கியங்களில் என்னுடைய தாய் யாய்’ என்றும், உன்னுடைய தாய் “ஞாய்’ என்றும், அவனுடைய தாய் “தாய் என்றும் குறிக்கப்பெற்றன. இதுபோன்றே ‘எந்தை” என்னும் சொல் என்னுடைய தந்தை’ என்பதனையும் “நுந்தை’ என்னும் சொல் ‘உன்னுடைய தந்தை’ என்ப த&னயும், தந்தை’ என்னும் சொல் அவனுடைய தந்தை’ என்பதனையும் உணர்த்துவனவாகும்

“யாயும் ஞாயும் யாரா கியரோ?

எந்தையும் நுங்தையும் எம்முறைக் கேளிர்”

-குறுந்தொகை 40: 1-2.