பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 கெஞ்சின் நினைவுகள்

அலத்தக மூட்டிய வஞ்செஞ் சீறடி நலத்தகு மெல்விர னல்லணி செlஇ

- சிலம்பு; 6 : 83 - 83.

என்னும் சிலப்பதிகார அடிகளுக்கு அரும்பதவுரைகாரர் எழுதிய உரைக்குறிப்பால் தெரிய வருகின்றது.

இடையணிகள்

சங்ககால மகளிர் ஆடைக்கோர் இறுக்கியாகவும், இடையின் அழகை எடுத்துக்காட்டும் இயல்புடனும் அமைந்த மேகலை, காஞ்சி என்னும் இடையணிகளை அணிந்தனர். இவை பல முத்து வடங்கள் தொங்கவிடப் பட்டுப் பட்டையாக அமைக்கப்படுவன. இக்காலத்து ஒட்டியாணம் என்னும் அமைப்பைக் கொண்டன. பதினறு வடம் கொண்ட மேகலை கலாபம் என்றும், பதினெட்டு வடம் கொண்டது பருமம் என்றும், முப்பத்திரண்டு வடம் கொண்டது விரிசிகை என்றும் வழங்கப்பட்டது. மாதவி விரிசிகை என்னும் முப்பத்திரண்டு வடங்கொண்ட மேகலையை லேச்சாதர் உடையின் மீது அணிந்திருந்த தாகச் சிலப்பதிகாரம் கூறும்.

  • பிறங்கிய முத்தரை முப்பத்து இருகாழ்

நிறங்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇ ‘

- சிலம்பு; 6 : 87 - 88.

காலணிகள்

சிலம்பு, கிண்கிணி ஆகிய அணிகள் காலில் அணியப் பட்டன. சிலம்பு குடைச்குல்’ என்றும் வழங்கப்படும். பெரும்பாலும் வெள்ளியால் செய்யப்படும் சிலம்பினுள் இரத்தினக் கற்களையும், முத்துக்களையும் LΙΑΓGυ/Τ45