பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகியல் போற்றிய அருந்தமிழர் 99

‘அரிபெய்து பொதிந்த தெரிசிலம்பு கழீஇ’

- அகம்; 831 : 15. முத்தரி பொன்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று ‘

- நற்றிணை; 110 : 5.

மாணிக்கமும் வைரமும் பத்திபட அழுத்திக் கிளிச் சிறை என்னும் பொன்னல் செய்யப்பட்ட சிலம்பு “குடைச்குல்’ என வழங்கப்பட்டதாகச் சிலப்பதிகாரம் கூறும்:

“ மத்தக மணியொடு வயிரங் கட்டிய

பத்திக் கேவணப் பசும்பொற் குடைச்சூற் சித்திரச் சிலம்பு ‘

ட சிலம்பு ; 16 : 117 - 119. அங்காந்த தேரை, தவளையின் வாய் வடிவத்தில் செய்யப்பட்ட அணி கிண்கிணி என்பதாகும்.

தேரைவாய்க் கிண்கிணி

- கலி; 85 : 9.

  • தவளைவாய பொலஞ்செய் கிண்கிணி ,

■. குறுங்; 148 : 2.

பெண் ஒருத்தி தன் உடம்பில் என்னென்ன அணிகலன்களே அணிந்திருந்தாள் என்பதனை அடியார்க்கு கல்லார் சிலம்பு கடலாடு காதை உரையில் மேற்கோள் காட்டியிருக்கிறார். மேலும் மாதவி தன்னை எவ்வாறு அணிசெய்து கொண்டாள் என்பதனைச் சிலப்பதிகாரம் கடலாடு காதை கொண்டு தெளியலாம்:

பத்துத் துவரினும் ஐந்து விரையினும் முப்பத் திருவகை ஓமா லிகையினும் ஊறின நன்னீர் உரைத்தநெய் வாசம்