பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

நெஞ்சின் நினைவுகள்

நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டிப் புகையிற் புலர்த்திய பூமென் கூந்தலை வகைதொறு மான்மதக் கொழுஞ்சே றுட்டி , அலத்தகம் ஊட்டிய அஞ்செஞ் சீறடி நலத்தகு மெல்விரல் நல்லணி செறீஇப் பணியகம் நூபுரம் பாடகம் சதங்கை அரியகம் காலுக் கமைவுற அணிந்து , குறங்கு செறிதிரள் குறங்கினிற் செறித்துப் பிறங்கிய முத்தரை முப்பத் திருகாழ் நிறங்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇக் , காமர் கண்டிகை தன்னெடு பின்னிய தூமணித் தோள்வளை தோளுக் கணிந்து , மத்தக மணியொடு வயிரம் கட்டிய சித்திரச் சூடகம் செம்பொற் கைவளை பரியகம் வால்வளை பவழப் பல்வளை அரிமயிர் முன்கைக் கமைவுற அணிந்து, வாளைப் பகுவாய் வணக்குறு மோதிரம் கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம் வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறி காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து, சங்கிலி நுண்தொடர் பூண்ஞாண் புனைவினை அங்கழுத் தகவயின் ஆரமோ டணிந்து, கயிற் கடை ஒழுகிய காமர் தூ மணி செயத்தகு கோவையிற் சிறுபுற மறைத்தாங்கு, இந்திர நீலத் திடையிடை திரண்ட சந்திர பாணி தகைபெறு கடிப்பிணை அங்கா தகவயின் அழகுற அணிந்து. தெய்வ உத்தியொடு செழுநீர் வலம்புரி தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்கணி மையீர் ஓதிக்கு மாண்புற அணிந்து