பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகியல் போற்றிய அருந்தமிழர் m 10s

இவ்வணிகள் அல்லாமலும் சுண்ணம், சந்தனம், சிந்துரம் முதலிய பொடிகளைத் தம் மேனியிற் பூசி மகளிர் தம்மை மணங்கமழச் செய்து கொண்டனர் என்பது தமிழ் இலக்கியங்கள் பலவற்றில், ஆங்காங்கே வரும் செய்தி களாகும். கால்களுக்கும் கைகளுக்கும் செம்பஞ்சு பூசிக் கொள்ளுதல், மார்பிற்குச் சந்த மலையச் செழுஞ்சேருடுதல்’ தலைக்கு முப்பத்திரு வகை ஓமாலிகை (Scented oil) எனும் நறுநெய் தடவிக் கொள்ளுதல், நெற்றிக்கு மணங் கமழும் திலகம் இட்டுக் கொள்ளுதல், கண்ணிற்கு மைதிட்டிக் கொள்ளுதல், மார்பிற்குத் தொய்யிலெழுதச் செய்து கொள்ளல் முதலான அணிசெயல் வகைகளை விரிவாக இலககியங்களில் காணும்பொழுது, பழந்தமிழர் தம்மை ஒப்பனை செய்து கொள்வதிற் காட்டிய ஆர்வமும் அக்கறையும் புலகிைன்றன. சுருங்கச் சொன்னல் அழகுக் கலேயை ஆராதித்தவர் பழந்தமிழர் எனலாம். அவர்கள் வாழ்வே அழகாக இருந்தது; அழகே அவர்கள் வாழ்வில் குடிகொண்டிருந்தது எனலாம். அழகியல் பொருட்களை அணிபெறக் கூட்டித் தம்மை அணிசெய்து கொண்டவர்கள் அவர்கள்.

இயற்கை அன்னே எளிதில் தந்த அரிய அழகுப் பொருள்களாம் மலர்களையும், இலைகளையும், தழைகளையும், தளிர்களேயும் வகையுறச் சூடித் தங்களின் வனப்பை மிகுதிப் படுத்திக் கொண்டவர்கள் அவர்கள். இதனைக் குறுக்தொகைப் புலவர் துரங்கலோரி,

உடுத்தும் தொடுத்தும் பூண்டும் செரீஇயும் தழையணிப் பொலிங்த ஆயம்’

- குறுங்தொகை; 295 : 1 - 3

என்று குறிப்பிடுகின்றார். கைபுனைந்தியற்றிய கவின் பெறு வனப்பொடு அங்காளில் காரிகையர் ஒப்பனைக் கலேயில் தேர்ச்சி பெற்று அழகுக் கலையின் அதிதேவதை களாகத் துலங்கினர் என்பதனை நந்தமிழ் இலக்கியங்கள் நயமுற நவிலுகின்றன.

7