பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகங்காட்டும் அருங்குறள் 103

- அகம் நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின் (708) - அகம் நக கட்பது கட்பு (786)

முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்ன (824)

அகம் நட்பு ஒரீஇ விடல் (830)

என்ற குறட்பாக்களில் உள்ளம் என்ற பொருளில் அகம் என்ற சொல்லாட்சி அமைவதைக் காணலாம்.

பகை அகத்துப் பேடிகை ஒள்வாள் (7.27) * பகை அகத்துச் சாவார் (723)

அமரகத்து வன்கண்ணர் போல (1027)

கோளு உடம்பின் அகத்து (1163)

எனவரும் இக்குறட்பாக்களில் இடம் என்ற பொருளில் அகம் என்னும் சொல் ஆளப்படுகிறது.

அகமும் முகமும்

  • அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ‘ என்பது பழமொழி. இதற்கொப்ப வள்ளுவரும் அகம் என்ற சொல்லைக் கையாளும் பொழுதெல்லாம் அதனை முகத் துடன் தொடர்புபடுத்தியே கூறியிருப்பதைக் காணலாம். அகத்தின் தொடர்பின்றி முகம் செயலில் ஈடுபடுவதில்லை. இனிய சொற்கள் என்பனவற்றிற்குத் துணையாக மனம் அமைகின்றது. வாய் மட்டும் இனிய சொற்களைக்கூறி மனம் அதற்குத் துணையாக அமையவில்லையெனில் முகம் அந்த வேறுபாட்டினைக் காட்டிவிடும். இவ்வுண்மையை,

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானம் இன்சொ லினதே அறம் .

என்ற குறட்பாவில் அடக்கிக் கூறுகிரு.ர்.