பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 நெஞ்சின் நினைவுகள்

அகமலர்ச்சி முகமலர்ச்சிக்கு வழிவகுக்கிறது. இவ் வாறு ஏற்படும் முகமலர்ச்சியின் பெருமையை உணர்ந்த வள்ளுவர்,

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து கல்விருந்து ஓம்புவான் இல் என்று கூறுகிரு.ர்.

வாய்ச்சொற்கள் எதுவுமின்றி முகக்குறிப்பால் மனத்தில் உள்ளதை அறிந்துகொள்ளக் கூடிய ஆற்றல் உடையவர் அறிஞர். இங்கும் அகத்தை உணர முகம் ஒரு கருவியாக கிற்கிறது.

முகம் நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின்

என்ற குறட்பா இதனை உணர்த்துகிறது. அடுத்து அகத்தைக் காட்டும் கண்ணுடியாக முகத்தைக் கூறுகிரு.ர். அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்.

இங்கு மனத்தின் இசைவின்றி முகம் கானகவே அகத்தைக் காட்டிவிடும் என்ற குறிப்பும் பெறப்படுகிறது.

இவ்வியற்கைக்கு மாருக இனிமையை முகத்தில் மட்டும் காட்டி அகத்தில் தீய எண்ணங்களே வைத்திருப பவர்களே வஞ்சனையாளர் என்றும், அத்தன்மையரைக் கண்டு அஞ்ச வேண்டும் என்றும் கூறுகிறார் வள்ளுவர். முகத்தின் இனிய நகாஅ அகத்தின்ன வஞ்சரை அஞ்சப் படும். இவ்வாறே நட்பின் இலக்கணத்தைக் கூறுகையிலும்,

  • முகநக நட்பது கட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு