பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகங்காட்டும் அருங்குறள் 105

என்று கூறுகிறார். இங்கு அக எண்ணங்களுக்கு அளிக்கப் படும் முதன்மை உணரப்படுகிறது. -

இவ்வாறு உள்ளம் என்ற பொருளில் கையாளப் படும் அகம்’ என்ற சொல்லேக் குறிப்பிடும்பொழுதெல்லாம், அறச்செயல்களுக்கு இந்த அகம் எவ்வாறு அரகை அமைகிறது என்பதைக் குறிப்பிடுகிறார். இந்த அகத்தைக் காட்டும் கருவியாக முகம் விளங்குதலை உணர்த்துகிரு.ர். இந்த அகம் அறத்திற்கு அரணுக அமையாது முரணுக அமையும்போது உண்டாகும் வன்மையையும் சுட்டிக் காட்டுகிறார். எனவே வள்ளுவர் அகத்திற்கு அளிக்கும் இன்றியமையாமையும் உணரப்பெறுகிறது. அகநிலையை உணர்த்தக் கையாளும் முறைகள் உள்ளம் என்ற அளவில் மட்டும் இதன் வரையறை யைக் கண்ட வள்ளுவர், பலவகையான உள்ளங்லைகளையும், பலவிதச் சூழல்களில் ஒருவருக்கே ஏற்படும் பலவகையான உள்ள நிலைகளையும் அளந்து காண்கிரு.ர். முன்பு முகத்தைக் கருவியாகக் கொண்ட வள்ளுவர் இங்கு மனத்தின் வெளிப்பாடாக நிகழும் சொல்லையும் செயலையும் அளவு கருவியாகக் கொள்கிறார், அவரவர் வாய்ச்சொற் களிலிருந்தும், செயல்களிலிருந்தும் அவரவர் மனநிலையை உணர்த்துகிறார், பிறவற்றைப் போன்றல்லாது காமத்துப் பாலில் பாத்திரமே தன்நிலையைக் கூறுவது போன்ற நாடகப்போக்கில் குறிப்பிட்ட நிலையினரின் மன உணர்வை வெளிப்படுத்துகிரு.ர். வள்ளுவர் காட்டும் அகநிலை வகைகள் 1. உலகில் சில மக்களின் பொதுவான மனநிலை தம் மனத்தின் கண்ணே மாசு இருக்கவும் அதனே மறைத்து தவஒழுக்கமுடையாரைப் போன்று ரோடி