பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகங்காட்டும் அருங்குறள் 107 ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குங் தன்மகனைச் சான்றாே னெனக்கேட்ட தாய் என்ற குறட்பாக்களில் சித்திரித்துக் காட்டுகிறார் வள்ளுவர்.

அன்பகம்

ஒருவன் இல்லறத்தில் அன்புள்ளம் கொண்டு வாழ் வதே அவன் கடத்தும் இல்லறத்தின் பண்பாக அமை கிறது. இந்தப் பண்பே அவனுக்கு அறம் என்ற பயனே அளிக்கிறது. இவ்வாறு அன்புள்ளம் கொள்வதன் இன்றி யமையாமையை,

  • அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது ‘ என்ற குறட்பாவழி உணர்த்துகிறார். அடுத்து அன்புள்ளம் கொண்டாரின் அன்பின் தன்மையை உணர்த்தும் வகையில்,

அன்பிற்கு முண்டோ அடைக்குங்தாழ் ஆர்வலர் புன்கணிர் பூசல் தரும் அன்பிலார் எல்லாங் தமக்குரியர் அன்புடையார் என்பு முரியர் பிறர்க்கு என்று கூறுகிறார்,

ஊக்கமுடையவர் உள்ள நிலை

இழப்புகள் பல நேர்ந்தாலும் தளராத உள்ளத்தைப் பெற்றவராயிருப்பர் ஊக்கமுடையவர்கள். இவர்கள் கைப் பொருளை இழந்தாலும் நிலைபெற்ற ஊக்கத்தைக் கைப் பொருளாகப் பெற்றிருப்பர்.

ஆக்க மிழந்தேமென் றல்லாவா ரூக்கம் ஒருவந்தங் கைத்துடை யார்