பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழி பிறந்த கதை !)

என்னும் தொடர்களில் யாய், ஞாய், எங்தை, துங்தை முதலான சொற்களைக் காணலாம். இச்சுருங்கிய சொற்கள் விரிந்து பொருள் தந்தன. சுருங்கச் சொன்னல் இச் சிறு சிறு சொற்கள் Capsule’ போல அமைந்து பெரும் பொருள் தந்தன. இன்று அச்சொற்கள் வழக்கு வீழ்ந்து, காய், தங்தை என்ற படர்க்கையிடச் சொற்களை மட்டும் பற்றிக் கொண்டு, என், உன், அவன் என்ற சொற்க ளோடு சேர்ந்து சொல்ல வந்த பொருளை உணர்த்துகின் மன. சொற்செறிவிலிருந்து நெகிழ்ந்து சொற்கள் பிற் காலத்தே பிறங்கிய நிலையினைக் காணலாம்.

மற்றாெ ன்றும் காணலாம். சங்க காலத்தில் “யானே’ என்பது ஆண் பெண் எனும் இருபாலினையும் உள்ளடக் கிய பொதுச் சொல்லாகும். களிறு என்றால் ஆண் யானை; ‘பிடி’ என்றால் பெண் யானை.

“காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்’

என்பது திருகாவுக்கரசர் தேவாரம். ஆல்ை இன்று பேச்சு வழக்கில் களிறு, பிடி என்ற சொற்கள் பயன்படுத்தப் பெறுவதில்லை. அதற்கு மாருக, ஆண் யானை என்றும், பெண் யானே என்றும் முறையே களிறு, பிடி என்னும் சொற்கள் உணர்த்தப்படு கின்றன. இங்கும் சொற் செறிவிலிருந்து நெகிழ்ச் சியை நோக்கி மொழி வந்து விட்ட நிலையினைக் காண்கி ருேம். களிறு, பிடி, யானை என்று மூன்று சொற்களே கினேவிலிருத்திக் கொள்வதில் துன்பமும், சோம்பலும்” பட்ட மனம், யானை என்ற பொதுச் சொல் ஒன்றினையே கினேவில் கொண்டு, ஆண், பெண் என்ற பொதுச் சொற் களைக் கூட்டிப் பாலுணர்த்தும் கிலேயி னேக் காணலாம். ஆயினும் இதல்ை தமிழ்ச் சொல்லாட்சி வளம் (diction) ஒரளவு இழக்கப்படுகின்றது என்பதனே உணர வேண்டும்.