பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 நெஞ்சின் கினைவுகள்

என்ற குறட்பா மூலம் ஊக்கமுடையாரின் இவ்வுள்ள கிலையை உணர்த்துகிறார் வள்ளுவர். இத்தகைய ஊக்க முடையவர்கள் தம்முடைய உயர்ச்சிக்குச் சிதைவு வந்தவிடத்தும் தளராது தம் பெருமையை நிறுத்தும் உள்ள வலிமை உடையவராக இருப்பர். இதனை விளக்க வந்த வள்ளுவர் இத்தன்மையை அம்பாற் புண்பட்ட விடத்தும் தளராது கிற்கும் களிற்றுக்கு ஒப்பிட்டு,

சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டுன்றுங் களிறு

என்று கூறுகிரு.ர்.

விருந்தினகரம்

விருந்தோம்புபவர்கள் தம் இல்லத்தைத் தேடிவரும் விருந்தினரை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும். சிறிது முகம் வேறுபடினும் அவர்கள் பெரிதும் வருந்துவர். விருங் தினரின் இப்பண்பை அனிச்சம்பூவின் தன்மையோடு ஒப்பிட்டு,

மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து ‘

என்று கூறுகிறார். இங்கு விருந்தினரின் மென்மையான உள்ளம் புலப்படுத்தப்படுகின்றது.

கற்பகம்

கற்புள்ளம் கொண்ட பெண் எல்லாப் பொருள்களைக் காட்டிலும் மேம்பட்டவளாகக் கருதப்படுகிருள். அவள் கொண்ட அக்கற்புள்ளமே அவளுக்குச் சிறந்த பாதுகாவ லாக அமைகிறது.