பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகங்காட்டும் அருங்குறள் 109

சிறைகாக்குங் காப்பெவன் செய்யு மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை என்று கூறுதல் மூலம் வள்ளுவர் கற்புள்ளத்தின் வலி மையை உணர்த்துகிரு.ர்.

துறவோரகம்

துறந்தாரது வாயிலிருந்து வெளிப்படும் சொற்கள் அவ்வப்பயனை அளித்து விடும் வலிமை வாய்ந்தன.

நிறைமொழி மாந்தர் பெருமை கிலத்து மறைமொழி காட்டி விடும் என்று அவர்களது வாய்ச்சொற்களை மறை மொழியாகவே கருதுகிறார் வள்ளுவர். இத்தகையவர்களிடத்துத் தோன் அறும் வெகுளி கணப்பொழுதே யாயினும் அதனைக் தடுத்தல் இயலாது. இவர்களைக் குணக்குன்றாக உருவகித்து,

‘ குணமென்னும் குன்றேறி கின் ருர் வெகுளி,

கணமேயுங் காத்த லரிது என்று கூறுகிறார் வள்ளுவர். இங்குக் கூறப்படும் துற வோர்களது தன்மை வாயிலாக அவர்களது உள்ளத்துாய் மையும், உள்ள வலிமையும் புலப்படுத்தப்படுகின்றன. அவர்களது விருப்பு வெறுப்பற்ற அகநிலையின் தன்மையும் உணரப்படுகின்றது.

ஆன்வினையுடையார் அகவலிமை

தனக்கு உண்டாகும் பயனைக் கெடுக்கும் ஊழையும் கருதாது முயற்சியுடையவர்கள் மேலும் மேலும் முயன்று கொண்டேயிருப்பர். துன்பத்திற்குத் தளராத இவர்களது உள்ள வலிமையை உணர்த்தவந்த வள்ளுவர்,

ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித் தாழா துளுற்று பவர் ‘