பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 நெஞ்சின் நினைவுகள்

என்று கூறுகிறார். இத்தகைய ஆற்றலுடையவர்கள் தமக்கு வரும் துன்பத்திற்கு அஞ்சாது அத்துன்பத்திற்கும் துன்பம் விளைவிக்கும் தன்மை யுடையராக விளங்குவர். இவர்களது கலங்காத உள்ளத்தை உணர்த்தவங்க, வள்ளுவர்.

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாருக் கொள்ளாதா மேல் ‘

என்று கூறுகிறார்.

மனத்தெளிவுடையார் உள்ள நிலை

குற்றமற்ற தெளிவான வினைத்துாய்மையை உடை யவர்கள் தனக்கு இடுக்கண் செய்தார்க்கும் துன்பத்தைச் செய்யாது இருப்பர். இதனைத் திருவள்ளுவர்,

  • இடுக்கட் படினு மிளிவந்த செய்யார்

நடுக்கற்ற காட்சி யவர் ’

என்ற குறட்பா மூலம் உணர்த்துகிறார். இங்குத் தெளி வுடைய மனமுடையார்க்கு எவ்விதத் தீய குணங்களும் ஏற்படா என்பதை உணர்த்தும் வகையில் “கடுக்கற்ற காட்சியவர்’ என்று குறிப்பிடுகிறார்.

பெருமையுடையார் அகநிலை

உயர்ந்த குணங்களையுடைய பெருமையுடையவர் தாம் வறியராய வழியும் பிறராற் செய்தற்கரிய நற்செயல்களே விடாது அந்நெறிமுறையிலேயே செய்து வருவர் (975). இத்தகைய பெருமையுடையவர்களின் தருக்கின்மையை உணர்த்தவந்த வள்ளுவர்,

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாங் தன்னை வியந்து