பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

みf I4 கெஞ்சின் நினைவுகள்

அறிதோ றறியாமை கண்டற்றாற் காமஞ் செறிதோறுஞ் சேயிழை மாட்டு ‘

எனவரும் தலைவன் கூற்றாக அமையும் குறட்பாவழி அறியலாம். தலைவியைப் பிரிதலே, உடலைவிட்டு உயிர் நீங்குதல் போன்ற உள்ள கிலேயாக எண்ணுகிருன் தலைவன் (1134).

தலைமகன் ஆற்றாமை

தலைவியிடத்து அன்பு மிகுந்த வழி அவளை அடையப் பெருத தலைமகன் தோழியிடத்து மடல் ஏற கினைக்கும் தன் -உள்ள கிலேயை வெளிப்படுத்துகிருன்.

காமம் உழந்து வருந்தினர்க்கு ஏமம் மடலல்ல தில்லை வலி ’

என்ற குறட்பாவழி இதனை அறியலாம்.

தலைவியின் அகநிலை

தலைவி தலைவனை மறவாது எப்பொழுதும் கினைத்துக் கொண்டு இருப்பவளாகவும், அவன் உருவத்தை எப்பொழு தும் காண்பது போன்ற மனநிலையை உடையவளாகவும் விளங்குகிருள். இதனை,

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேங் கரப்பாக் கறிந்து

என்று தலைவி கூற்றாக அமையும் குறட்பாக்கள் வழி அறியலாம்.