பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகங்காட்டும் அருங்குறள் 11?

முடிவுரை

இங்குக் கண்டவைகளில் இருந்து வள்ளுவரது குறட்பாக்கள், தன் குழந்தையின் அன்பைப் பெரிதாக மதிக்கும் தாயின் உள்ளகிலே தன் எலும்பையும் பிறருக் காக அளிக்கும் அன்புடையார் உள்ள கிலே, துன்பத்திலும்

தளராத ஊக்கமுடையார் உள்ளங்லை, முகம் வேறு பட்டால் மனம் வேறுபடும் விருந்தினரின் மென்மையான உள்ள கிலே, கற்புடைய பெண்டிரின் உறுதியான

உள்ளங்லை, விருப்பு வெறுப்பெற்ற துறவோரது உள்ள கிலே, தெளிவுடையவர்களின் கலங்காத உள்ளங்லை, பழிபாவங்களுக்கு அஞ்சும் சான்றாேரின் உள்ளப் பண்பு, கற்றவர், தீயவர், உயர்குடிப் பிறந்தாரின் இயற்கையான உள்ளகிலை ஆகியவற்றுடன் அகவாழ்க் கையில் ஈடுபடும் தலைவன் தலைவியரின் உள்ள நிலை போன்றவற்றை இயல்பான முறையில் நன்கு எடுத்துக் காட்டுவதைக் காணலாம். இவற்றுள் தலைவன் கலேவியரின் அகநிலையை மட்டும் நாடகப்போக்கில் அவர்கள் கூற்றா கவே உணர்த்திச் சென்றிருப்பது இவரது தனிச்சிறப்பாகும். தனிமனிதனுக இருந்துகொண்டு எல்லா வகைப்பட்ட மாங் தரது அகங்லைகளையும் உள்ளபடி காட்டும் வள்ளுவர் தம் குறட்பாக்கள் அவரது அறிவு நுட்பத்தைப் புலப்படுத்து வனவாய் உள்ளன.