பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1() கெஞ்சின் நினைவுகள்

‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே-அதைத்

தொழுது படித்திடடி பாப்பா’

என்றார் கவியரசர் பாரதியார். அவரே,

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி:போல்:

இனிதாவ தெங்கும் காளுேம்” என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்மொழி பழம் பெரும் மொழி; தொன்மைச் சிறப்போடு தூய காகரிகச் சிறப்புங் கொண்டமைந்த மொழி. உலகப் பழம்பெரும் மொழிகளோடு ஒப்பவைத் தெண்ணப்படும் உயர்தனிச் செம்மொழி. மாக்ஸ்முல்லர் என்னும் செர்மானிய மொழி நூலறிஞர், “தமிழ் மிகவும் பண்பட்ட மொழி என்றும், தனக்கே உரிய வளம் வாய்ந்த இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி (Tamil s lhe most highly cultivated language and possesses the richest stores of indigenous literature) argår spin (5,073.9 (Pairarrir. மேலும் ரைஸ்டேவிஸ் (Rhya Davids) என்னும் அறிஞர்: ‘வடமொழி, எபிரேயம், கிரேக்கம் ஆகிய மூன்று உலக இலக்கிய மொழிகளில் தமிழ்ச் சொற்கள் கலந்திருக் gReër, oor” (The threee classic languages of the world namely Sanskrit, Hebrew and Greek contain Tamil words in the Vocabulary) ar gör DI GAWLIL? --Gairoririr.

இவ்வாறு தமிழ் காலந்தோறும் வளர்ந்து செழித்துக் “கன்னித் தமிழ் எனக் களிப்புடன் போற்றத்தக்க திறனு டையதாக விளங்குகின்றது. ஒரு மொழியில் இலக்கியம் எழுந்த பின்னரே இலக்கணம் தோன்றும். தமிழ்மொழி யில் இன்று காணக்கூடிய நூல்களில் காலத்தால் முற் பட்ட நால் தொல்காப்பியமாகும். தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலாகும். எனவே தொல்காப்பியத்திற்கும்