பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

அன்று தொடங்கிய

உரைநடை

என்று பிறந்தவள் என்று இயம்ப முடியாத அளவிற் குத் தமிழ்த்தாய் தொன்மைச் சிறப்பு வாய்ந்தவளாவள். முப்பது நூற்றாண்டுகளாக முறையாக வளர்ந்த மொழி தமிழ். இலக்கண நெறியில் இலக்கிய வளங்கொண்டு செழிக்கும் இன் தமிழ் மொழியாம் தமிழில் தொன்னெடுங் காலத்தில் அறிவுரை, அறவுரை, அறிவியல், ஆன்மவியல், மருத்துவம், சோதிடம் முதலான துறைகளைப் பற்றிய செய்திகளைச் செய்யுள் வடிவில் எழுதி வைத்துப் போற்றும் வழக்கமே இருந்தது. உரைகடையிலும் ஒருவர் தம் மனத் தில் எழுந்த கருத்துகளே விளக்க முடியும் என்னும் எண்ணம் முகிழ்க்கவில்லை. எண்ணங்கள் ஏறிச்செல்லும் வண்டி மொழியென்றால் அவ்வெண்ணங்கள் செய்யு ளாகவே வடிவு கொண்டன. ஐரோப்பியர் வருகைக்குப் பின்னரே உரைநடை எனும் இலக்கிய வகை செழித்துப பரவியது எனலாம்.

இலக்கிய வரலாற்றை ஆராய்வோர் ஒரு மொழியில் பாட்டே முதலில் முகிழ்த்திருக்கக் காண்பர். மனிதன் தன் எண்ணங்களைப் பாட்டாகப் பாடித் தீர்த்தான்; இன்பத் திலும் பாட்டு, துன்பத்திலும் பாட்டு என்னும் நிலையில்