பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்று தொடங்கிய உரைநடை 119

மனிதன் வாழ்வின் எல்லாத் துறைகளிலும் பாட்டானது பங்குபெற்றது. உரைநடை மனிதன் பேச்சு வழக்கிலிருங் தாலுங் கூட, ஏட்டில் செய்யுள் இலக்கியமே வடிவம் பெற்றது, வாழ்வும் பெற்றது எனலாம். ஏடும் எழுத் தாணியுமே விளங்கிய அங்காள்களில் எழுதி வைத்துக் கற்பதற்கும் காப்பாற்றுவதற்கும் செய்யுளே பயன் பட்டது. உரைநடையெனின் அது விரிந்தது; மனப்பாடம் செய்வதற்குக் கடினமானது. மாரு கச் செய்யுளோவெனில் இசை கூட்டிப் படித்து எளிதில் மனப்பாடம் செய்வதற்கு ஏற்ற வகையில் இடம் தருவதாகும். மேலும் பல சொற் களில் உரைநடையில் சொல்ல வேண்டியதைச் சில சொற் களில் செய்யுளில் எதுகை மோனே அமைய எளிதாகச் சொல்லிவிடக் கூடிய முறையில் அமைந்திருப்பதுமாகும். எனவே செய்யுள் நடை சிறந்து விளங்கியது.

ஆயினும் தொன்னுாலாசிரியராம் தொல்காப்பியனர்

காலத்திலேயே பல்வேறு வகையில் உரைநடை செழித் திருந்தது என அறிய வருகிருேம்.

  • தொன்மை தானே

உரையொடு புணர்ந்த பழைமை மேற்றே ’’

என்று தொல்காப்பியனர் செய்யுளியலில் குறிப்பிட் டுள்ளார். “உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்று இதனே அக்காலத்தே வழங்கினர். பெருந்தேவனர் பாரதமும், தகடூர் யாத்திரையும் உரையிடை பிட்ட பாட்டுடைச் செய்யுளுக்குச் சான்றுகளாகப் பழைய உரை நூல்களில் காட்டப்படுகின்றன. மேலும் தொல் காப்பியர்ை,

அங்கதம் முதுசொலொ டவ்வேழ் கிலத்தும்

என்னும் பொருளியலில் ஒரு நூற்பாவினை அமைத் துள்ளார். இந்நூற்பா, நூல்புணர்க்கும் முறை ஏழு