பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்று தொடங்கிய உரைநடை 121

  • அதுகேட்டு, கொங்கிளங்கோசர், தங்கள் நாட்ட கத்து கங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய, மழை தொழில் என்றும் மாரு தாயிற்று ‘. எனவே இளங்கோவடிகள் காலத்து உரைநடை இஃதாயின் அவர் காலத்திற்கு முன்னும் உரைநடை இருந்திருக்க வேண்டும், ஆயின் அது நமக்கு இன்று கிடைக்கவில்லை என முடிவுக்கு வர வேண்டியுளது.

சிலப்பதிகார காலத்திற்குப் பின்னர்த் தமிழில் எழுந்த உரைநடை என்று இறையனர் களவியலுரையினைக் கொள்ளலாம். இவ்வுரை எழுதப்பட்ட காலம் கி. பி. எழு எட்டாம் நூற்றாண்டென்பர்; உரை எழுதியவர் நக்கீரர் என்பர்; இவர் சங்கப் பாடல்கள் புனைந்துள்ள கக்கீரரின் வேருனவர் ஆவர். கீழ்க்காணும் இவர்தம் உரை நிடை ஆசிரியப்பாவை அடுக்கி வைத்தாற் போன்று அழகுற இலங்குகின்றது. கேட்போர்க்குச் செவியின்பம் வழங்கும் கீர்த்தியதாய் இவ்வுரைகடை அமைந்திருக்கின்றது. பாங்கியர் பலரோடு வாழ்ந்த தலைவி, தற்போது சோலையில் தமியளாய் கிற்கும் அழகுக் காட்சியினைக் கவினுற வடிக்கும் நக்கீரர் கற்றிறம் காணக் கழிபேருவகை பிறக்கின்றது.

“யாங்ஙனம் கிற்கு மோவெனின், சந்தனமும் சண்பகமும் தேமாவும் தீம்பலவும் ஆசினியும் அசோகும் கோங்கும் வேங்கையும் குரவமும் விரிந்து, நாகமும் திலகமும் கறவும் கந்தியும் மாதவியும் மல்லிகையும் மெளவலொடு மணங் கமழ்ந்து, பாதிரியும் பாவை ஞாழலும் பைங் .ெ கா ன் ைற யு ம் பிணியவிழ்ந்து, பொரிப் புன்கும் புன்னகமும் முருக்கொடு முகைசிறந்து , வண்டறைந்து தேர்ைந்து வரிக்குயில்கள் இசை பாட, தண்தென்றல் இடைவிராய்த் தனியவரை