பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

நெஞ்சின் நினைவுகள்

முனிவு செய்யும் பொழிலது நடுவண், ஒரு மாணிக்கச் செய்குன்றின் மேல், விசும்பு துடைத்துப் பசும்பொன் பூத்து, வண்டு துவைப்பத் தண்தேன் துளிப்பதோர் வெறியுறு நறுமலர் வேங்கை கண்டாள்; கண்டு, பெரியதோர் காதல் களிகூர்ந்து, தன் செம்மலர்ச் சீறடி மேற் சிலம்பு கிடந்து சிலம்பு புடைப்ப, அம்மலர் அணிக் கொம்பர் நடை கற்பதென நடந்து சென்று, கறைவிரி வேங்கை காண்மலர் கொய்தாள்; கொய்தவிடத்து, மரகத மணி விளிம்படுத்த மாணிக்கச் சுனை மருங்கின.தோர் மாதவி வல்லி மண்டபத்துப் போது வேய்ந்த பூங்ாறு கொழு நிழற் கீழ்க் கடிக்குருக்கத்திக் கொடி பிடித்துத் தகடுபடு பசும்பொற் சிகரங்களின் முகடு தொடுத்து வந்து இழிதரும் அருவி, பொன் பொன் கொழித்து, மணி வரன்றி, மாணிக்கத் தொடு வயிரம் உங்தி, அணிகிளர் அருவி ஆடகப் பாறைமேல், அதிர்குரல் முரசின் கண்ணிரட்ட, வண்டும் தேனும் யாழ் முரல, வரிக்குயில்கள் இசைப் பாடத் தண்தாது தவிசுபடப் போர்த்த தோர் பளிக்குப் பாறை மணித்தலத்துமிசை, லே ஆலவட்டம் விரித்தாற் போலத் தன் கோலக் கலாவம் கொள விரித்து. முளே இளஞாயிறு இளவெயி லெறிப்ப, ஒர் இளமயிலாடுவது கோக்கி நின்றாள்.”

இதனையடுத்துத் தொல்காப்பியத்திற்கு உரை வகுக்கப் புகுந்த

உரையாசிரியர் காலத்தைக் காணலாம்.

  • உரையாசிரியர்’ என்றால் அச்சொல் இளம்பூரணரையே குறிக்கும். பெளத்தத் துறவியாக விளங்கி ஒல்காப் பெருமைத் தொல்காப்பியத்திற்கு முற்றிலும் ஒரு செம்மை