பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்று தொடங்கிய உரைநடை 123

யான உரை கண்ட இளம்பூரணர் உரை வலிமையும் தெளிவும் வாய்ந்ததாகும்; சொல்லவந்த கருத்தை அலைப்பின்றி நேரே நெஞ்சிற் பதியும் வண்ணம் தருவதாகும். சான்றாக, இளம்பூரணர் தொல்காப்பியப் பொருளதிகாரம் அகத்திணையியலின் முதல் நூற்பாவின் உரையின் ஒரு பகுதியினைக் காண்க:

“இந்நூலகத்து ஒருவனும் ஒருத்தியும் நுகருங் காமத்திற்குக் குலனும் குணனும் செல்வமும் ஒழுக்கமும் இளமையும் அன்பும் ஒருங்கு உளவழி இன்பம் உளதாம் எனவும், கைக்கிளை, ஒருதலை வேட்கை எனவும், பெருந்திணை ஒவ்வாக் கூட்டமாய் இன்பம் பயத்தல் அரிது எனவும் கூறுதலான், இந்நூலுடையார் காமத்துப் பயனின்மை உய்த்து உணர வைத்தவாறு அறிந்து கொள்க.”

இளம்பூரணர் எளிய நடைக்குப் பிறிதோர் சான்றினை.

‘பாலை என்பதற்கு கிலம் இன்றேனும், வேனிற் காலம் பற்றி வருதலின் அக்காலத்துத் தளிரும் சினையும் வாடுதலின்றி நிற்பது பாலை என்பதோர் மரம் உண்டாகலின், அச்சிறப்பு நோக்கிப் பால என்று குறியிட்டார்’

என்னும் பகுதியைக் கொண்டு அறியலாம்.

“வடநூற்கடலே கினைகண்டுணர்ந்தவர்’ என்று போற்றப் பெறும் சேவைரையர் தொல்காப்பியச் சொல்லதி காரத்திற்குச் சிறந்த உரை கண்ட செம்மல் ஆவர்.

இவர்தம் உரைச் சிறப்பிற்குப் பின்வரும் பகுதியினை எடுத்துக்காட்டலாம்.