பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 நெஞ்சின் கினைவுகள்

“வழுக்களைந்து சொற்களை ஆக்கிக் கொண்டமை யான், இவ்வோத்துக் கிளவியாக்கமாயிற்று. ஆக்கம்-அமைத்துக் கோடல்; நொய்யும் துறுங்கும் களைந்து அரிசி அமைத்தாரை, அரிசி யாக்கினர் என்பவாகலின் சொற்கள் பொருள்கள் மேல் ஆமாறு உணர்த்தினமையால் கிளவியாக்க மாயிற்று எனினும் அமையும்.’

பேராசிரியர்’ என்றே பெரும்பெயர் கொண்ட பேராசிரியர் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்க் தவர். தொல்காப்பியம். திருக்கோவையார்க்குத் தெள்ளிய உரை கண்ட திறவோர்.

திருக்கோவையார் பாடலொன்றிற்கு இவர் கண்டுள்ள உரை இழுமென் ஒலியால் விழுமியது நுவலும் போக்கில் அமைந்து, கற்பார் தம் மனத்தகத்தே சொல்லோவியம் ஒன்றனைத் தோற்றுவித்து கிற்கும் கலஞ்சான்றதாகும்.

‘ செவிலிக்குத் தோழி அறத்தொடு கிற்றல் என்பது, வெறி விலக்கி நிற்ப, நீ வெறி விலக்குதற்குக் காரணம் என்ைே என்று கேட்ட செவிலிக்கு, போய்ப் புனங்காக்கச் சொல்ல, யாங்கள் போய்த் தினைக்கிளி கடியா கின்றாேம்; அவ்விடத்து ஒரு யானை வந்து கின் மகளே ஏதஞ் செய்யப் புக்கது; அது கண்டு அருள் உடையான். ஒருவன் ஓடிவந்து அணேத்துப் பிறிது ஒன்றும் சிந்தியாமல் யானையைக் கடிந்து அவளது உயிர் கொடுத்துப் போயின்ை; அறியாப் பருவத்து நிகழ்ந்ததனை இன்று அறியும் பருவம் ஆதலான், ‘உற்றார்க்கு உரியர் பொற்றாெடி மகளிர்என்பதனை உட்கொண்டு இவ்வாறு உள் மெலியா