பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 நெஞ்சின் நினைவுகள்

கரும்பே தேனே யமிர்தே காமர் மணியாழே அரும்பார் மலர்மே லணங்கே மழலை யன்னம்மே சுரும்பார் சோலை மயிலே குயிலே சுடர்வீசும் பெரும்பூண் மன்னன் பாவாய் பூவாய் பிணைமானே’

-சிவக சிந்தாமணி, இலக்கணயார் இலம்பகம்:2458.

இப்பாடலுக்கு நச்சியார் எழுதும் உரை கற்றவர் எவரும் எஞ்ஞான்றும் நச்சும் உரையாக விளங்குதலைக் காணலாம்.

கணவற்கு மெய்ம் முழுதும் இனிதாய் இருத்தலின் கரும்பு. நல்லார் உறுப்பெல்லாம் கொண்டு. இயற்றலின் தேன். இவ்வுலகில் இல்லாத மிக்க சுவையும் உறுதியும் கொடுத்தலின் அமிழ்து. காம வேட்கையை விளைவித்து இனிய பண் தோற்றலின், மழலையை யுடையதொரு யாழ். கணவற்குச் செல்வத்தைக் கொடுத்தலின் திரு. நடையால் அன்னம். சாயலால் மயில். காலமன்றி யும் கேட்டார்க்கு இன்பம் செய்தலின் குயில். மன்னன் மகளே என்றல் புகழன்மையின் மன்னன் பாவாய் என்றது. அவன் கண்மணிப் பாவை என்பது உணர்த்திற்கு: இனி இவள் கொல்லிப் பாவையல்லள், மன்னன் பாவை என்றுமாம். சேடியர் கற்பித்த கட்டளே தப்பாமற் கூறலின் பூவை: நோக்கத்தால் மான்’

இவ்வாறு இடைக்காலத்தே தொல்காப்பிய உரையா சிரியர்கள் உரைநடை இலக்கியத்திற்கு வாழ்வும் வளமும் சேர்த்தார்கள்.

சிலப்பதிகாரம் என்னும் தேனினும் இனிய செந்தமிழ்க் காப்பியத்திற்கு உரை கண்டவர் அரும்பதவுரையாசிரியர்