பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்று தொடங்கிய உரைநடை 127”

ஆவர். வழக்குரை காதையில் வரும் கணவனேயிழங் தோர்க்குக் காட்டுவது இல் என்னும் தொடருக்கு இவர்,

  • தங்தை தாய் முதலாயிைேரை இழந்தார்க்கு அம்முறை சொல்லப் பிறரைக் காட்டலாம், இஃது அவ்வாறு வாக்காலும் சொல்லலாகாமை யின் காட்டுவதில் என்றாள்’

என்று தமிழ் பண்பாட்டின் தகைசான்ற உயிர்காடியினைத் தம் உரையிற் பெய்து காட்டியுள்ளார்.

திருக்குறளுக்குப் பதின்மர் உரையெழுதினுலும், பதின்மர் உரையிலும் பாராட்டத்தக்க உரை பரிமேலழகர் எழுதிய உரையாகும். இவருடைய உரை அளவை நாற் சிறப்பு மிக்குத் துலங்குகின்றது. காட்டாகத் திருக்குறள் அறத்துப்பாலின் உரைப் பாயிரப் பகுதியினைக் காட்டலாம்.

இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தமில் இன்பத்து அழிவில் வீடும், நெறி யறிந்து எஃதற்குரிய மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீடு என்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆகலின், துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவதல்லது இலக்கண வகையாற் கூறப்படாமையின் நூல்களாற் கூறப் படுவன என மூன்றுமே ஆம்’.

ஏறத்தாழ இதே கால கட்டத்தில் இருவகை உரை நடைகள் புதுவனவாகப் புகுந்தன, உருவாயின எனலாம். ஒன்று கல்வெட்டு உரைகடை; பிறிதொன்று மணிப் பிரவாள உரைநடை. இராசராச சோழன் காலக்