பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழி பிறந்த கதை 11

முன்னர் இலக்கியங்கள் தமிழ்மொழியில் கிலவியிருக்க வேண்டும். மேலும் தொல்காப்பியனர் தம் நூலில் பல விடங்களில் என்மனர் புலவர்’, ‘யாப்பறி புலவர்”, “நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே’, ‘நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே, கூறுப’, ‘மொழிப’ ‘என்ப’ என்றெல்லாம் தமக்கும் முற்பட்டுத் துலங்கிய இலக்கண வழக்கினைக் குறிப்பிட்டிருக்கக் காணலாம். எனவே தொல்காப்பியத்திற்கு முன்னரே தமிழில் இலக் கண நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்பது ஒருதலை. “அகத்தியம் என்னும் இலக்கண நூல் இருந்து மறைக் திருக்க வேண்டும்’ என்பர் ஆராய்ச்சியாளர். எனவே தமிழ்மொழி முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் கின்றாெளிர்கின்றது எனலாம். எனவே தான் மனேன்மணிய ஆசிரியர் பேரா சிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள்,

ஆரியம் போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையா வுன்

சீரிளமைத் திறங்கண்டு செயல்மறந்து வாழ்த்துதுமே”

என்று பாடினர். எனவே அமிழ்தினுமினிய நம் செந்தமிழ் மொழியினைக் கண்ணின் இமைபோற் காப்போம்; கவினுட னும் கலையழகுடனும் காலந்தோறும் வளர்ந்து செழிக்கச் செய்து வாழ்வோம்.