பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

고 () நெஞ்சின் நினைவுகள்

தம்மைப்போன்று இறைவனைப் பிரிங் த பிரிவால் கோவு படுகின்றனவாகக் கொண்டு, அவற்றுக்கு மாகத் தாம் வருந்தி, துக்கத்தையுடையவர்கள் தங்களோடு ஒத்த துக்கத்தையுடையவர்களைக் கழுத்தைக் கட்டிக்கொண்டு கிடந்து கூப்பிட்டு ஆற்றாமைக்குப் போக்கு விட்டுத் தரிக்குமாறு போன்று, இவளும் கண்ணுக்கு இலக்கான பொருள்கள் எல்லாவற்றாேடும் கழுத்தைக் கட்டிக்கொண்டு கிடந்து, நீ பட்டதோ, நான் பட்டதோ?’ என்று கூப்பிடுகின்றாள்”.

ஐரோப்பியர் வருகைக்குப் பின்னரே தமிழில் உரை நடை, உரைநடை என்று உறுதியாக அறுதியிட்டுச் சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு புத்துருவமும் புதுவாழ்வும் கொண்டது. தங்கள் சமயத்தைத் தமிழரிடையே பரப்பத் தமிழ் கற்ற ஐரோப்பியப் பாதிரிமார்கள் தமக்கென ஒர் உரைநடையினை வகுத்துக் கொண்டனர்.

மாயூரம் வேதங்ாயகம் பிள்ளையவர்கள் தாம் 1876 ஆம் ஆண்டில் எழுதிய தமிழின் முதல் நாவலாம் பிரதாப முதலியார் சரித்திரம்’ என்றும் நாவலில் பின் வருமாறு உரைநடை வளர்ச்சியின் இன்றியமையாமையினைப் புலப் படுத்தியுள்ளார்:

“ வசன காவியங்களால் ஜனங்கள் திருந்த வேண்டு மேயல்லாது செய்யுட்களைப் படித்துத் திருந்துவது அபத்தியமல்லவா? ஐரோப்பிய பாஷையில் ՅNI EF ՅԾT காவியங்கள் இல்லாமலிருக்குமால்ை அந்தத் தேசங்கள் நாகரிகமும் கற்பாங்கும் அடைந்திருக்கக் கூடுமா? அப்படியே நம்முடைய சுயபாஷைகளில் வசன காவியங்கள் இல்லாம