பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்று தொடங்கிய உரைநடை 131

லிருக்கிற வரையில் இந்தத் தேசம் சரியான சீர்திருத்தம் அடையாதென்பது நிச்சயம்’

(42ஆம் அதிகாரம்)

அச்சு இயந்திரங்களின் வருகை, தாள் உற்பத்தி, செய்தித்தாள்களின் தொண்டு இவற்றால் உரை

கடை வளர்ச்சியில் வேகமும் விறுவிறுப்பும் ஏற்பட்டன எனலாம்.

இலங்கை, யாழ்ப்பாணத்து கல்லூரிற் பிறந்த ஆறுமுக நாவலர் சிவனை மறவாத சிந்தையர் உரைநடைக்கு உரமிட்டு வளர்த்த உத்தமர். பெரியபுராணப் பதிப்பில் திருநீலகண்ட நாயனர் புராண முகப்பில் ஆறுமுக நாவலர் காமம் என்னும் சொல் குறித்து எழுதியுள்ள விளக்கம் அவர்தம் உரைநடை மாட்சியினை உரைத்து கிற்கும்.

  • பிறவிப் பிணி தீர்ந்து உய்தற்குத் தடையாய் உள்ள காமமானது, எத்துணேப் பெரியோர் களாலும் நீக்குதற்கரிது. அது கினைப்பினும், காணினும், கேட்பினும், தள்ளினும், விஷமானது த&லக்கொண்டாற்போல அத்தகைய நுண்ணறி வாளருடைய அறிவையும் கெடுக்கும் இயல் புடையது. அது கல்வியறிவு ஒழுக்கங்களால் ஆன்ற பெரியோர்களுடைய உள்ளத்தில் தலைப் படினும், இவ்வுள்ளமானது தான் செல்லத்தகும் இடம் இது எனவும் செல்லத்தகாத இடம் இது எனவும், ஆராயவிடாது. அது மேலிடும்பொழுது குணமும் குலமும் ஒழுக்கமும் குன்றுதலையும், பழியும் பாவமும் விளை தலையும் சிறிதும் சிந்திக்க விடாது. அக்காலமே கொலை, களவு, கள்ளுண்டல் முதலிய பாபங்களுக்கெல்லாம் காரணமாய் உள்ளது. ஆதலால் அக்காமமே