பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 நெஞ்சின் நினைவுகள்

ஆன்மாக்களை நரகங்களிலே எண்ணிறந்த காலம் வீழ்த்தி, வருத்தும் பெருங் கொடுமையுடையது. (பிரமாணம் பல). ஆதலால் காமம் மனசிலே சிறி தாயினும் எழ வொட்டாமல் அடக்க வேண்டும்’

இவருடைய உரைநடைத் தொண்டினைப் பதிப்பாசிரிய முதல்வர் யாழ்ப்பாணம் திரு சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள்.

  • கல்லைங்கர் ஆறுமுக நாவலர் பிறந்திலரே ற்

சொல்லு:தமி ழெங்கே சுருதி யெங்கே

என்று பாராட்டியுள்ளார். இவரோடு சமகாலத்தில் வாழ்ந் தவரும் வள்ளலார் என்றாலே தம் பெயரைக் குறிக்குமள விற்குப் பெருவாழ்வு வாழ்ந்த புண்ணியருமான சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள் மனுமுறை கண்ட வாசகம். எனும் உரைநடை நூல் யாத்துள்ளார்.‘சத்தியச் சிறு விண்ணப்பம்’ என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள உரைநடைப் பகுதியினைக் காண்க.

‘ எனது விருப்ப முயற்சி இங்ஙனமாக, அவத்தை களெல்லாவற்றையும் நீக்கி, இத்தேகத்தை கித்திய தேகமாக்கி, எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் எதற்ை பெறுதல் கூடுமென்று அறியத் தொடங்கிய தருணத்து, வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது, எல்லாமுடைய கடவுளது. திருவருட் சுதந்திரம் ஒன்றாலே பெறுதல் கூடு மென்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ள படி அறிந்தேன். பின்னர், திருவருள் சுதந்திரம் நமக்கு எந்தவழியாற் கிடைக்கு மென்று அறியத்