பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 நெஞ்சின் நினைவுகள்

வைத்தாலும், தெய்வத்தை உணரும் ஞான

மில்லாதவர்களுக்கும் மோகூடித்திற்கும் வெகு துாரமே!

அடுத்து, பஞ்சதந்திரம் எழுதிய தாண்டவராய முதலியாரின் உரைநடை குறிப்பிடத்தக்கது. “19 ஆம் நூற்றாண்டில் முற்றிலும் புதிய உரைநடையொன்று தோன்றியிருக்கிறது. அதுதான் உலக வழக்கை அனுசரித்த அழகிய வசனநடையாகும். இந்நடைக்குக் கர்த்தா என்று சொல்லத் தக்கவர் தாண்டவராய முதலியார்’ என்று டாக்டர் கால்டுவெல் இவரைப் பாராட்டியுள்ளார்.

கி.பி. 1870இல் பிறந்து 1903இல் மறைந்த சூரிய காராயண சாத்திரியார் தம் எல்லையற்ற தமிழ்ப்பற்றுக் காரணமாகத் தம் பெயரைப் பரிதிமாற்கலைஞர் என்று செந்தமிழில் மாற்றி வைத்துக் கொண்டவராவர். இவர்தம் உரைநடை மாட்சியினை இவர் எழுதியுள்ள மதிவாணன்’ என்னும் நாடகத் தமிழ் நூல் கொண்டு நன்குணரலாம்.

  • திருவளர்ந்தோங்கும் பரதகண்டத்துப் பாண்டிய காட்டு மதுரை என்னும் மாங்கரின் வைகையாற்று வடகரைக்கண் ஒர் காட் காலைப்பொழுது புலர்க் தது. சிறிது நேரம் சென்ற பின்னர்ச் செவ்விய மேனியன் சிவந்த நோக்கினன் பவள வாயினன் பரந்த மார்பினன் பதிருைட்டைப் பிராயத்தான் ஒர் இளங் தோன்றல் போர்க்கோலம் பூண்டு புரவி மீதேறிக் காற்றிலும் கடுகி வாரா கின்றான்’
  • தமிழ்த் தாத்தா “ எனத் தமிழ்கூறு கல்லுலகம் தலைமேல் வைத்துப் போற்றும் டாக்டர் உ. வே. சாமிநா தையர் எளிய இனிய தெள்ளிய தமிழில் படிப்போர் உளங் கவருமாறு உரைநடை நூல்கள் எழுதினர். ஏட்டிலிருந்த