பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்று தொடங்கிய உரைநடை 135

பல சங்கப் பனுவல்களை காட்டில் நூலாக உலவ விட்ட இவ்வுத்தமதானபுரம் சாமிநாதையர் இந்நூற்றாண்டின் தலைசிறந்த பதிப்பாசிரியரும் உரைநடையாசிரியருமாவர், இவர் எழுதியுள்ள “என் வரலாறு’ என்னும் வாழ்க்கை வரலாற்றுநூல் உரைநடை உலகில் ஒர் ஒப்பற்ற நூல் எனலாம். கினேவுமஞ்சரி’ என்ற அவர்தம் நூலிலிருந்து அவர் எளிய நேரடியான உரைநடைக்கு ஒர் எடுத்துக் காட்டு:

‘ கும்பகோணத்தில் நான் வேலை பார்த்து வந்த காலத்தில் அங்கே ஒரு வக்கீல் குமாஸ்தா வாழ்ந்து வந்தார். அவர் சுறுசுறுப்பும் முயற்சியும் உள்ளவர். அவருடன் அவருடைய தாயும் இருந்தாள். அவள் தன் குமாரரிடம் மிக்க அன்புள்ளவள். தன் பிள்ளை சாப்பிடுவதற்கு முன் உணவு கொள்ள அவளுக்கு மனம் வருவதில்லை. குமாஸ் தாவும் தம்முடைய அன்னையிடம் அன்புடையவ ராகவே இருந்தார்.

‘‘அநேகமாகக் குடும்பங்களில் ஒற்றுமைநிலை எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கல்யாணம் ஆவதற்கு முன் உள்ள அமைதியும், ஆனபின்பு வீட்டில் உண்டாகும் கலகங்களும், அந்தக் கலகங்களைப் பெண்கள் விருத்தி செய் வதும் புதுமையான விஷயங்கள் அல்ல. முன்னே குறித்த வக்கீல் குமாஸ்தாவுக்கு விவாகம் ஆயிற்று. அவருடைய மனைவி வீட்டிற்கு வந்தாள். அன்று முதல் அந்த வீட்டில் முன்பு தடை யில்லாமல் வளர்ந்துவந்த அன்பும் அமைதியும் கலக்கத்தை அடைந்தன. தாயினிடம் உள்ள குறையோ, வங்த பெண்ணிடம் உள்ள