பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்று தொடங்கிய உரைநடை 137

வன்னெஞ்சக் க ள் வ .ெ ைரு வ ைற் கவர்ந்து கொள்ளப்பட்டாற்போலவும் இத்தமிழ்நாட் டுக்கு ஒரு கல்வி மலராய், ஒர் அறிவு விளக்காய், ஒர் அருங்குணப் புதையலாய்த் தோன்றிய இவ்வி அளஞர் தமது 43ஆம் ஆண்டில் கதுமெனக் கூற்று வனற் கவரப்பட்டது ஒரு பெருங் கொடுமை யன்றாே?”

ஆங்கில உரைநடைக்கு ஒரு டிரைடன் (Dryden) போலத் தமிழ் உரைநடைக்கென வாய்த்த ஒரு பெரியார் தமிழ்த்தென்றல் திரு. வி. க. ஆவர். தமிழ்நாட்டு மேடை களில் எளிய இனிய சொற்களால் கேட்போர் நெஞ்சத்தைப் பிணைத்ததோடன்றிப் பத்திரிகைத் துறையிலும் கல்ல தமிழ் உலா வர ஒப்பற்ற முயற்சியினை மேற்கொண்டவர் திரு. வி. க. ஆவர். இவர் எழுதியுள்ள நூல்கள் அனைத்தும் கனியாய், கற்கண்டாய்ச் சுவை தருகின்றன எனலாம். காட் டுக்கு ஒன்று காண்போம்:

  • அழகு நுட்பம் உணர்ந்த மக்களுள், பண்டைத் தமிழ் மக்கள் தலைசிறந்து விளங்கினவர்கள். அவர்கள் பெண்ணை அழகென்றே கொண்டார் கள். பெண் என்னுங் தமிழ்ச் சொற்கு அழகு என்பது பொருள். பெண்ணே உணர்த்தும் மாதர் முதலிய சொற்கட்கும் அழகுப் பொருளி ருத்தல் காண்க. பெண், மாதர் இவைகள் ஆகு பெயர்கள். பல இடங்களில் ஒரோவழி விளங்கும் அழகெல்லாங் திரண்டு, பெண்ணுகி கிற் றலால், அழகுப் பொருள் அளிக்கும் பெண் என்னுஞ் சொல் பெண்ணுலகிற்குச் சூட்டப்பட்டது. லேவானத்தில் திங்கள் போலவும், மலையில் பொழில் போலவும், மலரில் கிறம் போலவும்,