பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலந்தோறும் கன்னித்தமிழ்

நாம் வாழும் தமிழ்நாடு உலகின் தொன்னிலங்களில் தஆலயாயதாகும்: தமிழினமோவெனில் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி’ எனப் பழமையும் வீரப்பண்பும் மிக்கதாகும். தமிழ் மொழி என்று பிறந்தது என்று இயம்ப முடியாத அளவிற்குக் கொன்மையும் பெருமையும் சான்றதாகும். ஆக, நாடு, இனம், மொழி என்னும் முத்திறப் பழமையும் பெரு மையுங் கொண்டு விளங்கும் நிலையில் இலக்கியங்கள் முகிழ்த்தன எனலாம். தமிழ்நாட்டு மக்கள் வேற்று நாட்டாருடன் வணிகத் தொடர்பும் கலைத்தொடர்பும் கொண்ட செய்திகள் சில சங்க இலக்கியத்தில் காணக் கிடக்கின்றன. அதற்கும் முற்பட்ட இலக்கியங்கள் தமிழ் மொழியில் இருந்திருக்க வேண்டும் என இறையனர் அகப் பொருள் உரை கொண்டு நாம் உணர முடிவதல்ை பிற நாட்டாருடன் தமிழ் மக்கள் தொடர்பு கொள்வதற்கு முன்னமேயே தமிழிலக்கியம் முகிழ்த்து மலர்ந்து வளரக் தொடங்கி விட்டது எனலாம்.

நமக்கு இன்று கிடைக்கும் நூல்களிலே மிகப் பழமை யான நூல் தொல்காப்பியமாகும். அஃது ஒர் இலக்கண நூல். எள்ளினின்று எண்ணெய் எடுபடுவது போல, இலக்கியத்தினின்றும் எடுபடுவது இலக்கணம்’ என்பது