பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 நெஞ்சின் நினைவுகள்

பறவைகளில் மயில் போலவும், விலங்குகளில் மான் போலவும், பெண் என்னும் அழகு இவ்வழகிய உலகை அழகு செய்கிறது. பெண்

இல்லையேல் உலகில் அழகு ஏது?” (பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை: ப. 16, 17)

திரு. வி. க. அவர்களுக்குப் பின்னர்த்தமிழ் உரைநடை வானில் தாரகை என மின்னியவர் சொல்லின் செல்வர் டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களாவர். எதுகை நய மும் மோனைச் சிறப்பும், பழந்தமிழ் இலக்கியத் தொடர் களைப் பாங்கு றக் கையாளும் திறமும் இவர் உரைநடையின் தனிச்சிறப்புகளாகும். சென்னை மாநகரம் குறித்து இவர் ஆற்றங்கரையினிலே’ என்னும் நூலில் எழுதியுள்ள கட்டுரையின் ஒரு பகுதி வருமாறு:

“ தமிழ் அன்னையின் திருமுகம் எனத் திகழ்வது சென்னை மாநகரம். அந்நகரின் கடற்கரையிலே அலைகள் அயராமல் இசை பாடும்; கானலஞ் சோலையிலே கலாபமயில் ஆர்த்து ஆடும். இவ்வாறு மயில் ஆர்க்கும் பாக்கமே மயிலாப்பூர் என்று பெயர் பெற்றது.

    • மயிலேக் கடற்கரையின் அழகுக்கு 9ئے/LPG5 செய்தது ஒர் அல்லிக்குளம். மண்ணிரும் ஆகாத முந்நீரின் அருகே நல்ல தண்ணிர் உதவி கின்ற அம்மணற்கேணியை அல்லிக்கேணி என்று. மயிலையார் அழைத்தார்கள். அதைச் சுற்றி எழுந்தது ஒரு சிற்றுார். தொண்டை காட்டு மன்னன் அதன் அண்டையில் திருமாலுக்கு ஒரு கோயில் எடுத்தான். அவன் அருளால் ஊர்