பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்று தொடங்கிய உரைநடை 139

சீராயிற்று; அல்லிக்கேணி திருவல்லிக்கேணி யாயிற்று. அல்லிக்கேணியின் அருகே அமைந்த திருக்கோயிலில் கடற்காற்றின் சுகத்தை நுகர்ந்து கண்வளர்ந்த இறைவனை மனங்கசிந்து பாடினர் திருமழிசையாழ்வார்’

(ஆற்றங்கரையினிலே; பக்: 16, 17)

பேரறிஞர் அண்ன அவர்கள் தமிழ் உரைநடையில் ஒரு மறுமலர்ச்சியைத் தோற்றுவித்த பெருமைக்குரியவ ராவர். அவர் எழுதுகோல் தமிழ் இலக்கியத்தின் பல துறை களிலும் புகுந்து தொண்டாற்றியது. “அவர் தொடாத துறை இல்லை; தொட்ட துறைகளை அழகுபடுத்தாமல் விட்டதில்லை’ என்றபடி அவர்தாம் மேற்கொண்ட துறை களில் ஒளி வீசித் திகழ்ந்தார்.அவர்தம் உரைநடை கேருக்கு கேர் கின்று பாசம் பொழியப் பேசுவது போலிருக்கும்; எதுகை மோகன இயைந்திருக்கும்; சிக்கலின்றித் தெளிவாக இருக்கும். தம் மதிநலம் விளங்க அவர் எழுதிய உரை நடைக்கு ஒர் எடுத்துக்காட்டுக் காண்போம்:

  • பெரிதும், கண்ட காட்சிகளைக் காண்பதால் ஏற்படும் கருத்துடன் இணைத்துத் தருவதற்கே பண்டைத் தமிழ்ப் புலவர்கள் விரும்பினர்.
  • காடுகளையும் காறுைகளையும், ஓடைகளேயும் அவைதமில் துள்ளும் மீன்களையும், குவளை யையும், தாழையையும், யானையையும் பெடையை யும், செங்கால் நாரையையும் கருங்குயிலையும், கடுவனையும் மந்தியையும், உதிர்ந்த பூக்களேயும் உலர்ந்த தருக்களையும், பாய்ந்தோடும் அருவி களையும், பட்டுப்போன மொட்டுக்களையும்” காணும்போதெல்லாம் அவர்கட்குக் கருத்து