பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 நெஞ்சின் கினைவுகள்

ஊற்றெடுத்திருக்கிறது. அத்துணைக் கருத்தும் உண்மையோடு ஒட்டியவையாக, கேட்போர் மறுக்கொன வகையினதாக, கேட்டு இன்புறத் தக்கதாக அமைகின்றன. இந்தச் சிறப்பு புலவர் தேடித் தந்தது’

(தம்பிக்கு, அண்ணு வின் கடிதங்கள். ப. 197)

பேராசிரியர் டாக்டர் மு. வ. அவர்கள் அரியவற்றை யெல்லாம் எளிதில் விளக்கவல்ல திறன் சான்றவர்கள். காவல், நாடகம், சிறுகதை. மொழி இயல், இலக்கிய ஆராய்ச்சி, கடிதங்கள் ஆகிய பல இலக்கியத் துறைகளிலும் அவர் எழுதுகோல் அயராது தொண்டாற்றியது. எளிமை யும் இனிமையும் சொற்செட்டும் தெளிவும் அவர்தம் உரைநடையின் தனி இயல்புகள்.

  • பறவைகள் அன்பாக வாழ்கின்றன. அவை

களுக்கு வாய் இல்லை; பேச்சு இல்லை; பிணக்கும் இல்லை. மக்கள் வாழ்க்கையில் வாய்தான் வன்பும் துன்பும் செய்கின்றது; பேச்சு வளர் கின்றது; பிணக்கும் முற்றுகின்றது. அன்பான வாழ்க்கையிலும் திடீரென அன்பு முறி கின்றது......

‘ எல்லாம் இருந்தும் பயன் இல்லை. விட்டுக் கொடுக்கும் மனம் இல்லை. அதுதான் பெரிய தியாகம். வீட்டைத் துறப்பது. செல்வத்தை வழங்குவது, உயிரைக் கொடுப்பது இவைகளும் தியாகம்தான். ஆல்ை, அன்பானவர்கள் ஒருவருக் கொருவர் விட்டுக்கொடுத்து வாழும் தியாகம்தான் பெரிய தியாகம். விட்டுக்கொடுக்கும் அந்தப் பெருந்தன்மை இல்லாவிட்டால் கணவன் மனைவி