பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்று தொடங்கிய உரைநடை 141

கூடி வாழ முடியாது. எவ்வளவு அறிவு இருக் தாலும் போரும் பிணக்கும் வளருமே தவிர, அன்பும் அமைதியும் வளர முடியாது. அதல்ை கணவனும் மனைவியும் கற்க வேண்டிய முதல் பாடம் விட்டுக் கொடுப்பதுதான். அதுவே கடைசிப் பாடமும் ஆகும்’

(கள்ளோ காவியமோ, ப. 107-109)

இவ்வாறு தமிழ் உரைநடைச் செடி பூத்துக் குலுங்கிக் காண்பார் கவனத்தையும் கருத்தையும் ஈர்ககும் வகையில் வளர்ந்து வருகின்றது. இதழ்களின் பெருக்கமும் எழுத்தாளர் பெருமக்களின் தொண்டும் இன்று உரைநடை இலக்கியத்தைச் செழிக்கச் செய்து வருகின்றன. ஐரோப்பியர் வருகையாலும், அச்சியந்திர சாதனப் பெருக் கத்தாலும், அறிவியல் முன்னேற்றத்தாலும் தமிழ் உரை கடையின் வளர்ச்சி தளர்நடைப் பருவத்தைத் தாண்டி, தகுநடைப் பருவத்தில் கால் வைத்துக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் இன்னும் அது பல்லாற்றானும் பல்கிப் பெருகி வளரும் என்பது திண்ணம்.